தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜீத். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. தற்போது அதே போல் மீண்டும் அஜித் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பிரபலங்களை பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் வருவதும் சர்ச்சை உருவாக்குவதும் சகஜம்தான். அந்த வரிசையில் தற்போது அஜித் அரசியலுக்கு வரப்போவதாக சர்ச்சை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கூடிய விரைவில் இவர் கட்சி ஆரம்பித்து தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனை பார்த்த அஜித் தரப்பினர் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அஜித்குமாருக்கு அரசியல் வரும் எண்ணம் துளியும் கிடையாது.
இந்த மாதிரி வரும் செய்திகள் அனைத்தும் வதந்தியே இதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் மேலும் ரசிகர்கள் இதனை கொண்டாடும் விதமாக எந்த செயலிலும் ஈடுபட வேண்டாமென அந்த அறிக்கையில் தெள்ளத்தெளிவாக அஜித்தின் மேனேஜர் கூறியுள்ளார்.
இதனால் அஜீத் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதாவது அஜித் அவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கூறிவரும் நிலையில் இந்த தகவல் வெளியானதால் கண்டிப்பாக இனி அஜித் எந்த ஒரு அரசியலில் ஈடுபட போவதில்லை என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது. இருந்தாலும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அஜித் அவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் நற்செயலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.