திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்.. ஆப்பு என்று தெரியாமல் கையில் வாங்கிய விக்னேஷ் சிவன்

வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன் தல அஜித்தின் தல 62 படத்தை இயக்குவதற்காக கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தல அஜித் மற்றும் விக்னேஷ் சிவனின் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித் விக்னேஷ் சிவனுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட விக்னேஷ் சிவன் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளாராம்.

சமீபத்தில் தல அஜித்  தல 61 திரைப்படத்தையும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் ஒரு காம்போவில் வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான அப்டேட்களை ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய இயக்கத்தில் நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார். இதனிடையே நடிகர் அஜீத் இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளாராம்.

ஏனென்றால் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்றது.இப்படத்தின் தோல்விக்கு காரணம் தளபதி விஜய்யின் நடிப்பு திறமையை வைத்து நெல்சன் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்று ரசிகர்களும், விமர்சகர்களும் கூறியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட தல அஜித் சற்று யோசித்து வருகிறாராம்.

ஏனென்றால் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இதனால் முன்னணி நடிகர்கள் இனி நடிக்கப் போகும் இடங்களில் தெளிவாக இருக்கிறார்கள். இதனிடையே தற்போது வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தல அஜித்தின் திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னால் அவருடன் தல 62 திரைப்படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுக்கப் போவதாக கூலாக தல அஜீத் கூறியுள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் என்ன செய்யலாம் என்று தெரியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறாராம்.

Trending News