ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வலிமை வரலனா நடுத்தெரு தான்.. கவலையில் போனிகபூர்

இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் பிசியான தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் கடந்த சில மாதங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவருக்கு என்னபா 5 படம் தயாரிக்கிறார், சும்மா சொல்லாதீங்க என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இன்றைய தேதிக்கு அவரின் நிலைமை பரிதாபம்தான்.

பாலிவுட்டில் படம் தயாரித்துக் கொண்டிருந்த பிரபல முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவர் தமிழில் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் அதனைத் தொடர்ந்து மீண்டும் அஜீத்தை வைத்து வலிமை படத்தை எடுத்தார்.

ஆனால் நினைத்தபடி வலிமை படம் உருவாகவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி சென்று இதனால் படத்தின் பட்ஜெட் நினைத்ததை விட அதிகமாக எப்படியோ ஒரு வழியாக படத்தை முடித்து ரிலீஸ் வரை வந்தவருக்கு மேலும் சோதனையாக மீண்டும் பட ரிலீஸ் தள்ளி சென்றது.

இதனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று தானே கேட்கிறீர்கள். வலிமை படம் மட்டும் இல்லாமல் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, சத்யராஜ் ஆர் ஜே பாலாஜி ஆகியோர் நடித்துவரும் வீட்ல விசேஷங்க மற்றும் பாலிவுட்டில் பெரிய 2 படம் என ஒரே நேரத்தில் 5 படத்தை தயாரித்து வந்தார்.

இதனால் தற்போது வலிமை படம் வெளியாகி அந்த படத்தின் பிசினஸ் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் அவரது அடுத்தடுத்த படங்களுக்கான வியாபாரம் அமையும் என்பது கேட்பவர்கள் எல்லாம் சொல்வதால் வலிமை படம் எப்படியாவது வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று விட வேண்டும் என வேண்டாத சாமி இல்ல.

வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி வலிமை படம் வெளியாக  இருக்கிறது. அப்படி வலிமை படம் வெற்றி பெற்றால் மட்டுமே போனி கபூரின் அடுத்தடுத்த படங்களின் வசூலும் வியாபாரங்களும் நல்லபடியாக அமையும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. ஒருவேளை வலிமை படம் நினைத்தபடி இல்லை என்றால் பெரிய கடன் சுமைக்கு ஆளாகி விடுவார் எனவும் கூறுகின்றனர்.

Trending News