வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கைகுலுக்கிய பின் டெட்டாலில் கை கழுவிய அஜித்.. தேவையில்லாத சர்ச்சையை கிளப்பிய விஷமிகள்

Ajith Kumar: நடிகர் அஜித் குமார் சென்னையில் சிறுவர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய புகைப்படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல் ஆக்கினார்கள். நடிகர் அஜித்குமார் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் டிரண்ட் ஆகி கொண்டிருக்கின்றன.

அஜித் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மோட்டார் சைக்கிளில் ரைடு சென்ற பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக ஆரம்பித்தன. இது போன்ற ரைடுகளின் போது அஜித்குமார் ரசிகர்களை சந்திப்பது, அவர்களோடு உரையாடுவது, புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது என ரொம்பவும் இயல்பாக இருந்து வருகிறார்.

Also Read:விடாமுயற்சி பற்றி ஒரு கவலையும் இல்ல.. சைக்கிளில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்

இப்படி அஜித் குமார் ரசிகர்களை சந்திக்கும் போன்று எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் ரசிகர்களை சந்தித்த அஜித் குமார், அவர்களிடம் கை குலுக்கிய பிறகு, அவர்கள் முன்னிலையில் தன்னுடைய கையை டெட்டாலால் சுத்தம் செய்வது போன்று இருக்கிறது. இதுதான் சர்ச்சைக்கான காரணம்.

நடிகர் அஜித்குமார் போன்ற தன்மையான குணம் கொண்டவர், இப்படி ரசிகர்கள் முன்னிலையில் அவர்களை காயப்படுத்துவது போல் இப்படி நடந்து கொண்டிருப்பாரா என்ற சந்தேகம் அவருடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் ஒரு பக்கம் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீயை போல் பரவி வருகிறது.

Also Read:பிரமிக்க வைக்கும் அஜித்தின் சொத்து மதிப்பு.. ஆடம்பரமான பைக், கார், ஜெட் விமானம் வாங்கிய ஏகே

உண்மையில் அந்த புகைப்படத்தை நன்றாக உற்றுப் பார்த்தால், அஜித்குமாரின் கைகளில் இருக்கும் பாக்கெட் வேறு மாதிரி இருக்கிறது. புகைப்படத்தில் சுட்டிக் காட்டப்படும் டெட்டால் அந்த போட்டோவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அஜித்துக்கு கெட்ட பெயர் வர வைப்பதற்காக விஷமிகள் இதுபோன்று செய்திருப்பதாக அந்த போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.

                                                   சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

Ajith
Ajith

மேலும் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், நோயிலிருந்து காத்துக் கொள்ளவும் அஜித் குமார் அப்படி டெட்டாலில் கை கழுவி இருந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை என்று அவருடைய ரசிகர்கள் சொல்கிறார்கள். மற்றவர்களை மதிப்பது என்பது வேறு, தன்னை பேணுவது என்பது வேறு. இதன் மூலம் அஜித்தின் பெயரை கெடுத்து விட விஷமிகள் இப்படி செய்வது தேவையற்ற வேலை என்றே கருதப்படுகிறது.

Also Read:அஜித் அன்றைக்கு சொன்ன தெய்வ வாக்கு, இப்ப பழித்துவிட்டது.. தலையில் தூக்கிக் கொண்டாடும் வில்லன் நடிகர்

Trending News