அஜித் அடுத்த வாரம் துபாய் செல்ல இருக்கிறார். அதற்காக குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி இரு படங்களின் வேலையை ஒரு சேர முடித்து விட்டார்.
துபாயில் ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடக்க இருக்கும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த பந்தயத்தில் எடை “slap” எனப்படும் பிரிவிற்காக தன்னுடைய எடையை முழுவதுமாக குறைத்து விட்டார்.
இவ்வளவு உயரம், அதற்கு தகுந்த எடை என கார் ரேசுக்காக ”slap” ஒன்றை பிரித்து வைத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இப்படி மாறியுள்ளார்.
நேற்று வெளிவந்த போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. சுகர் வந்த நோயாளி போல் அவரது உடல் மிகவும் உருக்குலைந்து காணப்படுகிறது.
அதுவும் போக ஹாலிவுட் பட வாய்ப்புகளும் அவருக்கு வந்திருக்கிறது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆக இவர் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.