Ajith: குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஆரம்பத்திலேயே இந்த படத்திற்கான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இடம் ஏற்கனவே அஜித் ஒரு டைம் டிராவல் படம் பண்ணலாம் என கேட்டிருந்தார். இது கூட அந்த கதை தான் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரனின் அசிஸ்டன்ட் டைரக்டர் அவர் தந்தை தான். அவர்தான் இவருக்கு கதையில் நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து வளர்த்து விட்டவர். ஆதிக் சினிமாவில் எப்பொழுதுமே நடைமுறையில் இருக்கும் விஷயங்களில் ஒரு அப்டேட்டட் இயக்குனராக இருப்பார்.
வெளிவந்த குட் பேட் அக்லி அப்டேட்
நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் அஜித்துக்கு நன்கு அறியப்பட்டவர் ஆதிக்ரவிச்சந்திரன். இவர் ஒரு ட்ரெண்ட் செட் இயக்குனர். இப்படி கரண்ட் அப்டேட்டில் இருப்பதாலேயே அஜித் இவரை நம்பி இந்த படத்தை கொடுத்து விட்டார். இந்த படத்திற்கு அஜித் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்திருக்கிறார்.
அஜித் மூன்று விதமான கெட்டப்பில் வருகிறாராம். அதுதான் இந்த படத்திற்கு சிம்பாலிக்காக குட் பேட் அக்லி என பெயர் வைத்துள்ளனர். இதில் வரும் கெட்டப்புக்காக அஜித் கிட்டத்தட்ட 12 கிலோவில் இருந்து 15 கிலோ வரை குறைத்து இருக்கிறார்.
அது மட்டும் இன்றி வயிற்று பகுதியில் உள்ள தொப்பையை முற்றிலும் குறைத்து மிக ஸ்லிம்மாக மாறியுள்ளார். இப்பொழுது அவரின் லேட்டஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
இதற்கு முன் ரசிகர்களிடம் அஜித் எடுத்து கொண்ட புகைப்படங்கள்
சமீபத்தில் வெளியான அஜித்தின் புகைப்படங்கள்
- 24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி போடோஸ்
- அஜித்துடன் பிறந்தநாள் கொண்டாடிய கிரிக்கெட்டர் நடராஜன்
- குடும்பத்தை விட்டு ஊர் ஊராய் சுற்றும் அஜித்தின் புகைப்படங்கள்
- சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் வெயிட் லாஸ் புகைப்படங்கள்