தியேட்டரில் குறைந்த ரெஸ்பான்ஸ்.. ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி

Vidaamuyarchi OTT Release: அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கியிருந்த விடாமுயற்சி கடந்த 6ம் தேதி வெளிவந்தது. திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் இதில் நடித்திருந்தனர்.

லைக்கா தயாரிப்பில் பல போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்த படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் ஆடியன்ஸ் தங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்தனர்.

வசூலும் அடுத்தடுத்து லாபகரமாக இருந்தது. ஆனால் போகப் போக படத்தின் வசூல் குறைய ஆரம்பித்து தற்போது வரை கலெக்சன் 125 கோடியாக உள்ளது.

ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி

அதேபோல் தியேட்டரில் தற்போது படத்திற்கு இருந்த ரெஸ்பான்ஸ் முற்றிலும் குறைந்து விட்டது. இந்த வாரம் டிராகன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் திரைக்கு வருகிறது.

அதனால் விடாமுயற்சி அடி வாங்கும் என்றே தெரிகிறது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி 100 கோடி வரை கொடுத்து இந்த உரிமையை வாங்கி இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் மார்ச் முதல் வாரத்தில் விடாமுயற்சி படத்தை ஸ்ட்ரீமிங் செய்ய பிளான் செய்துள்ளது.

அதேபோல் சாட்டிலைட் உரிமையை பெற்றிருக்கும் சன் டிவி தமிழ் புத்தாண்டு தினத்தன்று படத்தை டிவியில் ஒளிபரப்பவும் திட்டமிட்டுள்ளது.

Leave a Comment