1000 வருடத்திற்கு பின் மறுபிறப்பு எடுக்கும் மாமன்னன்.. அஜித் எடுக்க போகும் அவதாரம், யார் அந்த மன்னன் தெரியுமா?

Ajith Kumar: நடிகர் அஜித்குமார் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். கார் பந்தயத்தில் பிஸியாக இருக்கும் அஜித் அதை முடித்துவிட்டு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்த நிலையில் அவருக்காக ஒரு பேண்டஸி கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

அஜித் எடுக்க போகும் அவதாரம்

ஆயிரம் வருஷத்திற்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னன் ஒருவர் புதிய பிறப்பு எடுத்து தன் வாழ்ந்த இடத்திற்கு வருவது போல் அந்த கதைக்களம் இருக்குமாம்.

அந்த மன்னன் வேறு யாருமில்லை, தமிழ்நாட்டை பொற்காலமாக மாற்றிய ராஜராஜ சோழன் தான். ராஜராஜ சோழன் தான் கட்டிய கோவிலை ஆயிரம் வருடம் கழித்து மறுபிறப்பு எடுத்து பார்க்க வருகிறார்.

தமிழக கலாச்சாரம், உணவு. மக்களை பார்த்து ஏமாற்றம் அடையும் ராஜராஜ சோழன் அதன் பின்னணியில் நடக்கும் கதை என திரை கதை எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற ஒரு கதையில் அஜித்தை பார்க்க அவருடைய ரசிகர்களும் ஆவலாக இருக்கிறார்கள். இது குறித்து ஏதேனும் அதிகார பூர்வ அறிவிப்பு வருகிறதா என ஒரு திறந்து பார்க்கலாம்.

Leave a Comment