வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த அஜித் மச்சான்.. பெருமைக்கு எருமை ஓட்டிய மட்டமான வேலை

ஷாலினியின் சகோதரரும், அஜித்தின் மச்சானுமான ரிச்சர்ட் ரிஷி பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னும் ஒரு தரமான வெற்றிக்காக போராடிக் கொண்டு தான் இருக்கிறார். இருப்பினும் தான் நடிக்கும் படத்திற்காகவும், தன்னுடைய கேரக்டருக்காகவும் அவர் நிறைய விஷயங்களில் மெனக்கெடுக்கிறார்.

அப்படித்தான் தற்போது அவர் நடித்து வரும் படத்திற்காக ஒரு ப்ரோமோஷன் செய்திருந்தார். ஆனால் அதுவே அவருக்கு பல பிரச்சினைகளை வீடு தேடி கொண்டு வந்து விட்டிருக்கிறது. அதாவது அண்மை காலமாகவே இவரும் யாஷிகாவும் ஒன்றாக இருக்கும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதை ரிஷி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Also read: அஜித்தின் முதல் காதலி இவரா.. அந்தஸ்து பார்த்து கழட்டிவிட்ட சம்பவம்

ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் அடுத்தடுத்த போட்டோக்கள் வெளிவந்ததை பார்த்து இருவரும் காதலிப்பதாக நினைத்துக் கொண்டார்கள். அதை தொடர்ந்து விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது மட்டுமின்றி அஜித் மச்சானுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று ரீதியிலும் கருத்துக்கள் கிளம்பியது. இதனால் பதறிப் போன ரிஷி தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது நானும் யாஷிகாவும் சில நொடிகளில் என்ற படத்தில் நடித்து வருகிறோம். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை தான் நான் என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டேன்.

Also read: விஜய் பட வில்லனை உறுதி செய்த மகிழ் திருமேனி.. நியூ லுக்கில் மிரட்ட வரும் ஏகே

இது ஒரு ப்ரமோஷனுக்காக தானே தவிர எங்களுக்குள் காதலும் கிடையாது, கல்யாணமும் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை கேள்விகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். ப்ரோமோஷன் செய்வதற்கும் ஒரு அளவு கிடையாதா, இப்படியெல்லாமா மட்டமாக யோசிப்பார்கள்.

இதன் மூலம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்த்திருக்கிறீர்கள் என ரிஷியை விளாசி வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் அஜித், ஷாலினியை வைத்து தான் பெரிதாக பேசப்பட்டது. இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை வருமோ என்ற பயத்தில் தான் ரிஷி விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் இது காதல் விவகாரம் தான் என்றும் கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகும் என்றும் திரை உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Also read: அஜித்தை பாடாய்படுத்தும் விடா முயற்சி.. ரஜினி படத்திற்கும் அதே கதி தானா?

Trending News