எல்லாரும் படுத்துற பாட்டுல ஊரை காலி பண்ண போகும் அஜித்.. சென்னை திரும்ப மறுக்கும் அவலம்

Ajith may be shift his place to dubai: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்கள் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக உள்ளார். நிதி நெருக்கடி காரணமாக விட்டு விட்டு ரெடியாகும் இந்த விடாமுயற்சி, தலைக்கு தலைவலியாய் மாறி உள்ளது. 

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அஜித்தின் துணிவு பட வெற்றிக்குப் பின் மிகத் தாமதமாய் ஆரம்பிக்கப்பட்ட விடாமுயற்சி, ஒளிப்பதிவாளர் மாற்றம், கலை இயக்குனரின் மறைவு போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது.   

அஜித், திரிஷா, அர்ஜுன் நடிப்பில் ரெடியாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அஜித் அஜர்பைஜானில் இருந்து துபாய்க்கு சென்று வருகிறார்.

அஜித்திற்கு துபாயில் பாம் ஜுமேரா பகுதியில் வீடு ஒன்று உள்ளது. சமீபத்தில் அவரது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளையும் துபாயில் உள்ள சொகுசு படகில் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.  

அடிக்கடி துபாய்க்கு சென்று வருவதை பார்த்த ரசிகர்கள் அஜித் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரோ என்று கேள்விக்கணை தொடுத்துள்ளனர். அது மட்டும் இன்றி இங்கே மீடியாக்கள் அஜித்தை குறி வைத்தே பல மறைமுக தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

தனக்கென ஒரு கொள்கை பிடிப்போடு வாழும் அஜித்தை புறக்கணிக்கும் வகையில், இவருக்கு எதிரான விஷமிகள் சிலர் அவரைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

மேலும்  தமிழ் சினிமாவில் தன் தரத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தி பட வாய்ப்புகளை பெருக்கும் போது, அஜித் சம்பளம் கேட்டால் மட்டும் தெறித்து ஓடுகின்றனராம் தயாரிப்பாளர்கள்.

துபாய் மெரினா பகுதியில் வீடு வாங்கிய அஜித்

பல வகையிலும் கூட்டி கழித்து கணக்கு பார்த்த அஜித், நாம் துபாயில் செட்டிலாகி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ துபாயின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மெரினா பகுதியில் மேலும் ஒரு வீட்டை வாங்கி உள்ளாராம் அஜித். 

இது அஜீத் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இவர் இணையும் அடுத்த படம் “குட் பேட் அக்லி” முழுக்க முழுக்க ஜப்பானில் படமாக்கப் படுகிறதாம். இனி இவரை சென்னையில் காண்பது அபூர்வம் தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →