வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

யூடியூபர் இர்ஃபான் பிரச்சனையில் அடிபடும் அஜித்தின் பெயர்.. 15 வருஷத்துக்கு முன்னாடி நடந்தத இப்ப கிளறணுமா?

Ajith Kumar: பிரபல யூட்யூபர் இர்ஃபானுக்கு கடந்த சில மாதங்களாகவே கெட்ட நேரம் சுழற்றி அடிக்கிறது. கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி என்பது போல், இர்ஃபான் போடும் வீடியோக்கள் எல்லாம் பஞ்சாயத்தில் முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை துபாய் வரை அழைத்து சென்று பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டதோடு, அதை வீடியோவாகவும் வெளியிட்டார்.

ஏகப்பட்ட வியூஸ்கள் மற்றும் லைக்குகள் தனக்கு வந்து குவியும் என எதிர்பார்த்தார். ஆனால் போலீஸ் அவரை தேடி சென்றது தான் மிச்சம். பிறகு மன்னிப்பு எல்லாம் கேட்டு இந்த பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார்.

இர்ஃபான் பிரச்சனையில் அடிபடும் அஜித்தின் பெயர்

இப்போது அதைவிட பெரிய பிரச்சனையை பண்ணி இனி அவர் மன்னிப்பு கேட்டாலும் சும்மா இருக்க மாட்டோம் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டது. இர்ஃபான் வெளிநாட்டில் இருப்பதால் அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடக்கும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென இந்த பிரச்சனையில் நடிகர் அஜித்குமாரின் பெயரும் வருகிறது. இர்ஃபானுக்கும், அஜித் குமாருக்கும் என்ன தொடர்பு என எல்லோருக்குமே சந்தேகம் வரலாம். ஆனால் இது கிட்டத்தட்ட உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விஷயம் தான்.

நடிகர் அஜித்குமாருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அப்போது அவர் பிரசவ அறையில் ஷாலினி உடன் இருந்ததோடு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இன்று வரை சமூக வலைத்தளத்தில் இருக்கிறது.

Ajith
Ajith
Ajith
Ajith

அஜித் இப்படி செய்தால் மட்டும் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்களா என சில விஷமிகள் கிளப்பி விட்டு வருகிறார்கள். உண்மையில் தற்போது இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க காரணம் அவர் அவருடைய குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதால் தான்.

தவறாக ஏதும் நடந்திருந்தால் தாய் மற்றும் சேயின் உயிருக்கே ஆபத்து ஆயிருக்கும் என நிறைய மருத்துவர்கள் இந்த வீடியோ குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனால் இர்ஃபானுக்கு ஒரு நியாயம், அஜித் குமாருக்கு ஒரு நியாயம் என பேசுவதே தவறானது.

Trending News