வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

Vijayakanth-Ajith: ஏழைகளின் நாயகனாக இருந்த கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உயிர் நீத்தார். 2023 ஆம் ஆண்டு இறுதி இப்படி ஒரு சோகம் நிறைந்ததாக இருக்கும் என நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டோம்.

அந்த துயரிலிருந்து இன்னும் கூட மீள முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சக கலைஞர்களான டாப் ஹீரோக்கள் பலரும் அவருடைய இறுதி சடங்கில் பங்கேற்கவில்லை. ஒட்டு மொத்த நடிகர்களும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டனர்.

அதில் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும்போது அவர் வந்திருக்கலாமே என்ற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. அதுவும் இல்லை என்றால் மற்றவர்களைப் போல ஒரு வருத்தம் தெரிவித்து வீடியோ, ட்வீட் ஏதாவது போட்டு இருக்கலாம்.

Also read: கேப்டன் இறுதிச் சடங்குல கலந்துக்க துப்பில்ல, வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டமா.? கிழித்தெறிந்த ப்ளூ சட்டை

ஆனால் அப்படி எதுவும் அஜித் செய்யவில்லை. கேப்டனின் மனைவியிடம் அவர் போனில் பேசியதாக செய்தி வெளியானது. ஆனால் அது நிச்சயம் உண்மையாக இருக்காது. இப்படி இருக்கும் சூழலில் அவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

அதிலும் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் ஆடுகிறார். அதை பார்த்த ரசிகர்கள் இதற்கெல்லாம் நேரம் இருக்குது. சக கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரம் இல்லையா? என அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். ஆனால் அஜித் வழக்கம்போல இதை கண்டும் காணாமல் துடைத்து போட்டு விட்டு சென்று விடுவார்.

Also read: கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

Trending News