திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதுகளை பாதுகாத்துக்கோங்க, அஜித் எச்சரித்த 3 விஷயங்கள்.. வெளிவந்தது விடுகதைக்கான விடை

தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் அவர் பற்றிய எந்த விஷயமானாலும் அது சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் அவர் சமீபத்தில் போட்ட டிவிட் ஒன்று ரசிகர்களை மண்டை காய வைத்துள்ளது.

அதாவது அவர் உங்கள் காதுகளை கவனித்து கொள்ளுங்கள் என்று ஒரு டிவிட் போட்டிருந்தார். அவர் எதற்கு இப்படி கூறினார் என்று புரியாமல் பலரும் அதற்கான விடையை தேடி அலைந்தனர். இதனால் சோசியல் மீடியாவே ரணகளமாக இருந்தது.

Also read: இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த விஜய்.. அஜித் ஆள் அட்ரஸ் காணுமே

இந்நிலையில் தற்போது அவர் கூறியதற்கான காரணம் என்ன என்று தெரிய வந்துள்ளது. அதாவது அஜித்துக்கு அதிகப்படியான சத்தம் என்றால் பிடிக்கவே பிடிக்காதாம். அதனால் அவர் முடிந்த அளவு அதிகபட்ச சத்தத்தை தவிர்த்து விடுவாராம். இதை அவர் தன்னுடைய நலம் விரும்பிகளுக்கும் அறிவுரையாக கூறி வருகிறார்.

காரில் பயணிக்கும் போது அல்லது பொது இடங்களில் இருக்கும் போது அதிக அளவு சத்தம் வைத்து பாடல்களை கேட்காதீர்கள் என்றும், அது நம் காதுகளுக்கு நல்லது கிடையாது என்றும் அவர் பலரிடமும் கூறி வருகிறாராம். அது மட்டுமல்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர் சில கண்டிஷங்களை முன் வைக்கிறார்.

Also read : இரவு பார்ட்டியில் அஜித் மகள், ஷாலினி.. புகைப்படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்

அந்த வகையில் குறைவான சத்தம் எழுப்பும் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு காட்சிகள் போன்றவை இருக்கும் படி அவர் பார்த்துக் கொள்வாராம். இதற்காக சில வெளிநாட்டு டெக்னாலஜிகளை பயன்படுத்தும் படி அவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் ஸ்ட்ரிட்டாக கூறி விடுவாராம்.

மேலும் படப்பிடிப்பு தளங்களில் மைக் மூலம் அதிக சத்தம் எழுப்புவதையும் அவர் விரும்ப மாட்டாராம். இதனால் அவருக்கு பிடித்த வகையில் அதிக சத்தம் இல்லாமல் தான் சூட்டிங் நடைபெறுமாம். அந்த அளவுக்கு அஜித் அதீத சத்தத்தை வெறுத்து வருகிறார். இதனால்தான் அவர் தன்னுடைய ரசிகர்களிடமும் காதுகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

Also read : போற இடமெல்லாம் சக்சஸ் தான்.. திருச்சி துப்பாக்கிச்சூடும் போட்டியில் அஜித்க்கு இத்தனை பதக்கங்களா.?

Trending News