சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நெப்போட்டிச சுழலில் சிக்கிய அஜித்.. பிரசாந்த், விஜய்யின் ஆதிக்க அலையில் கரையேறிய AK

Ajith: பாலிவுட்டில் இந்த நெப்போட்டிஸம் தலைவிரித்து ஆடுவதாக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. இதில் வளர்ந்து வரும் ஹீரோக்களின் நிலமை திண்டாட்டம் தான். அது இப்போது தென்னிந்தியா பக்கமும் அதிகரிக்க தொடங்கி விட்டது.

கோலிவுட்டை பொறுத்தவரையில் இப்போது கிடையாது பல வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த நெப்போட்டிஸம் இருக்கிறது. அந்த சுழலில் சிக்காமல் போட்டி போட்டு கரையேறிய பெருமை அஜித்துக்கு உண்டு.

ஆரம்ப காலகட்டத்தில் இவர் சந்திக்காத பிரச்சனைகளே கிடையாது. அதில் பிரசாந்துக்கும் இவருக்கும் கடும் போட்டி நிலவியதாக அப்போது பத்திரிகைகளில் வெளிப்படையான பேச்சு இருந்தது. ஒரு விதத்தில் பார்த்தால் அது உண்மைதான்.

ஏனென்றால் சங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படம் உருவானபோது அதில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். ஆனால் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் அந்த வாய்ப்பை எப்படியோ தன் மகனுக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.

தலைவிரித்தாடும் நெப்போட்டிஸம்

அது மட்டும் கிடையாது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித் கேரக்டரில் நடிக்க இருந்தது பிரசாந்த் தான். ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்த தபு வயதானவராக தெரிவார் என பிரசாந்த் தரப்பில் கூறியிருக்கின்றனர். அதன்பிறகு அப்படி இப்படி என அஜித் கைக்கு சென்று இருக்கிறது.

மேலும் தீனா படத்தில் பிரசாந்த் நடிக்க இருந்தாராம். ஆனால் அப்போது அவர் வேறு ஒரு படத்தில் பிஸியாக இருந்த நிலையில் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என ஏ ஆர் முருகதாஸ் அஜித்திடம் சென்று விட்டாராம். இந்த தகவலை தியாகராஜனே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

ஆனால் ஒரு தரப்பினர் அஜித்துக்கு கிடைக்க வேண்டிய படங்களை எல்லாம் இவர்கள் தட்டி பறிக்க முயற்சி செய்தார்கள் என கூறி வருகின்றனர். அதேபோல் எஸ் ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்தோடு நுழைந்த விஜய் அஜித்துக்கு சரியான போட்டியாக மாறினார்.

இப்போது வரை இவர்களுடைய போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் என வாரிசு நடிகர்களின் வரவும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆதிக்க அலைகளை தாண்டி தற்போது தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ள அஜித்தை அவரின் ரசிகர்கள் தலை மேல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

ஆதிக்க அலையில் சிக்காமல் மீண்ட அஜித்

Trending News