ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டாலே உச்சாணி கொம்புக்கு செல்லும் நடிகர்கள் மத்தியில் அஜித் வேறு ஒரு மனிதராய் காட்சியளிக்கிறார். ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை முழுவதுமாக உடைத்து எறிந்துள்ளார். திரைக்குப் பின்னால் இன்று வரை அவர் காட்டும் உண்மை முகம்.
2011ஆமான்டு அஜித் ரசிகர் மன்றத்தை கலைக்குமாறு அறிவுறுத்தினார். மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள், அந்த நாளில் அவர் வீட்டில் முன் ஏராளமான ரசிகர்கள் கூடுவதும், மிகவும் சிரமப்பட்டு வெளியூர்களில் இருந்து வருவதும், சாப்பிடாமல் நீண்ட நேரம் காத்து கிடப்பதும் அஜித்துக்கு பிடிக்கவில்லை.
இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இதுதான் தொடரும் என தன்னுடைய நாற்பதாவது வயதில் ரசிகர் மன்றத்தை கலைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அன்றிலிருந்து இந்த நற்பணி இயக்க மன்றம் இயங்கவில்லை.
ரசிகர் மன்றத்தை கலைத்த பின்பும் மீடியா மக்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொண்டார் அஜித். நடிகை மனோரமா இறப்புக்கு வந்த அஜித் குமாரை ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் சுற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதும், கை கொடுப்பதுமாய் இருந்தார்கள். இது அவருக்கு பிடிக்கவில்லை அதனால் எந்த ஒரு இடத்திற்கு வருவதையும் தவிர்த்தார்.
துபாயில் கார் ரேஸில் கலந்து கொண்ட அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நீங்கள் உங்களுக்காக வாழுங்கள், அஜித், விஜய் வாழ்க இன்றுகோஷம் போடாதீர்கள் என ரசிகர்களுக்கு பெரிய அறிவுரை ஒன்றை வழங்கினார். இப்படி நடிகர்களை கொண்டாடாதீர்கள் என இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்ததில்லை. இதுதான் அஜித் தனித்துவமாய் தெரிவதன்பின்னணி.