புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பலவருட கோபத்தால் துரத்தி விட்ட அஜித்.. தளபதியிடம் தஞ்சம் புகுந்த பிரபலம்

அஜித் தற்போது புதுப்பொலிவுடன் பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். இதற்காக அவர் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார். வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித் இதை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படங்களுக்கு பிறகு அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்தத் திரைப்படத்தில் அஜித்துடன் நடிகர் வடிவேலுவும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் சில மாதங்களாகவே மீடியாவில் பரவி வருகிறது.

இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றனர். அதில் கடைசியாக இவர்களின் கூட்டணியில் ராஜா திரைப்படம் வெளிவந்தது. அந்த படத்திற்கு பிறகு வடிவேலு, அஜித்தின் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ராஜா திரைப்படத்தின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் வடிவேலு அஜித்துடன் இணைந்து நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே அஜித் மிகவும் மரியாதையான மனிதர். ஆனால் வடிவேலு அவரை ராஜா படத்தின் போது அலட்சியப்படுத்தியதாகவும், உதாசீனமாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் அஜித் அதன்பிறகு வடிவேலுவை தன் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை.

தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வரும் நிலையில் இயக்குனர் சிவா இந்த விஷயத்தை அஜித்திடம் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட அஜித் வடிவேலுவை இந்த படத்தில் சேர்க்க வேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டாராம். அதனால் வடிவேலு தற்போது மிகப்பெரிய வருத்தத்தில் இருக்கிறாராம்.

பல வருடங்களுக்கு பிறகு அஜித் சமாதானமாகி தன்னை படத்தில் சேர்த்துக் கொள்வார் என்று வடிவேலு மிகவும் எதிர்பார்த்தார். ஆனால் அவருடைய ஆசை நிராசையாகி போய்விட்டது. அதனால் வடிவேலு இப்போது விஜய்யை சந்தித்து அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

அதற்கு விஜய்யும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறேன். இந்த படத்தில் உங்களுக்கான வாய்ப்பு இருந்தால் நிச்சயம் உங்களுக்கு அது கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளார். இதன் மூலம் வடிவேலு தனக்கு எப்படியும் இந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Trending News