Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்

Ajith : அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தின் மூலம் காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக்கு என்ற குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக ஆதிக் விளையாட்டில் மிகுந்த […]

Ajith : அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தின் மூலம் காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக்கு என்ற குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக ஆதிக் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார்.

நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இன்று தங்களது 24 ஆவது திருமண விழாவை கொண்டாடுகிறார்கள். சமீப காலமாகவே அஜித் மற்றும் ஷாலினி இருவரின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

பைவ் ஸ்டார் ஹோட்டலில் திருமண விழாவை கொண்டாடிய அஜித், ஷாலினி

ajith-shalini
ajith-shalini

அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான லீலா பேலஸில் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர் அஜித், ஷாலினி. அவர்கள் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதே மகிழ்ச்சியுடன் பல வருடம் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற மே 1 அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது.

24 ஆவது திருமண விழாவை கொண்டாடிய ஷாலினி அஜித்

ajith-shalini
ajith-shalini

இப்போதே இதற்காக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மே ஒன்றாம் தேதி அஜித்துடைய விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.