வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மூன்று முறை திருமணம் செய்த அஜித்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக வலம் வருபவர்கள் அஜித், ஷாலினி. அமர்க்களம் என்ற திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்த பொழுது காதல் வயப்பட்டு கடந்த 2000 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் மூன்று விதமான முறையில் தங்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர். அதாவது அஜித்தின் அப்பா பாலக்காட்டைச் சேர்ந்த தமிழர். ஆனால் அவரின் அம்மா கொல்கத்தாவை சேர்ந்த குஜராத்தி. இதனால் அஜித் தன்னுடைய திருமணத்தை குஜராத் வழக்கப்படி ஒரு முறை செய்து கொண்டார்.

அதன் பின்னர் அவரின் மனைவி ஷாலினி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படியும் ஒரு முறை திருமணம் நடைபெற்றது. பிறகு எம்மதமும் சம்மதம் என்று தெரிவிக்கும் வகையில் முஸ்லிம் முறைப்படியும் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

தற்போது இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி இருபது ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றும் அந்த காதல் மாறாமல் இந்த ஜோடி திரையுலகில் வலம் வருகிறது.

இப்போது இருக்கும் நடிகைகள் திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சில நேரங்களில் நடிப்பிற்கு திருமணம் ஒரு தடையாக இருந்தால் அப்படிப்பட்ட திருமண வாழ்வே வேண்டாம் என்று முடிவு செய்து விவாகரத்து வரை செல்கின்றனர்.

இந்த நடிகைகளுக்கு மத்தியில் ஷாலினி புகழின் உச்சியில் இருந்த போதும் தன் காதலுக்காக திருமணத்திற்குப் பின் சினிமாவில் நடிக்காமல் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். அந்த வகையில் இந்த நட்சத்திர ஜோடி இப்போது இருக்கும் நடிகைகளுக்கு ஒரு நல்ல உதாரணமாகும்.

Trending News