வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

22 வருடமாக பொத்தி பொத்தி வைத்த அஜித்-ஷாலினி திருமண ரகசியம்!

கடந்த 1999ஆம் ஆண்டு சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த அஜித் மற்றும் ஷாலினி, அந்தப் படத்தில் நடிக்கும்போதே ஒருவரை ஒருவர் காதலித்து அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போதுவரை திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் ரசிக்கக் கூடிய டாப் ஜோடிகளாக ரசிகர்களின் உள்ளத்தில் தனி இடத்தைப் பிடித்த தம்பதியர்கள் ஆக இருக்கின்றனர்.

இன்னிலையில் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத ஷாலினியின் குடும்பத்தை அஜித் எப்படி சரி கட்டினார் என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது அஜித், ஷாலினியை காதல் திருமணம் செய்ய ஷாலினியின் அப்பாவிற்கு பணம் கொடுத்த பிறகுதான் திருமணம் செய்திருக்கிறார்.

ஏனென்றால் அஜித் ஷாலினியை காதலிக்கும் காலத்தில் அஜித் பெரிய நடிகர் அல்ல. மிகவும் சாதாரணமாக இருந்தார். அதனால் அவர்களது திருமணத்திற்கு ஷாலினி அப்பா சம்மதம் தெரிவிக்கவில்லை. காரணம் அப்பொழுது அஜித் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகராக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து கொண்டு சாதாரண நிலையில் இருந்ததார் .

ஆனால் ஷாலினி அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அதை காரணம் காட்டி, என்னுடைய மகள் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் மூலம் வரும் வருமானத்தை நான் விட மாட்டேன். எனக்கு பணம் முக்கியம் என்று ஷாலினி அப்பா, அஜித்திடம் சொல்லியிருக்கிறார்.

உடனே அஜித் ஷாலினி நடித்துக்கொண்டிருந்த படத்திற்கும், அவர் கமிட்டான படங்களுடன் மொத்தப் பணத்தையும் சேர்த்து ஷாலினி அப்பா கையில் கொடுத்துவிட்டு, ஷாலினியை திருமணம் செய்திருக்கிறார். இதனால் ஷாலினிக்கும் அஜித் மேல் உள்ள மரியாதை அதிகரித்து இப்போதுவரை எந்த படங்களிலும் நடிக்காமல் அஜித்துக்கு மட்டும் உண்மையான மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

எனவே ஷாலினியின் அப்பா மற்றும் அஜித்துக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரசிகர்களின் மத்தியில் தல அஜித்தின் மீது தனி மதிப்பும் மரியாதையும் இருந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த செய்தியை கேட்ட பிறகு தல ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர்.

Trending News