அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இணையத்தில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாவது மிகவும் அபூர்வம். ஆனால் வலிமை படத்தின் ரிலீஸ் தொடர்ந்து அஜித்தின் நிறைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதுவும் இப்போது அஜித் தனது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் அதிக வெளியாகி வருகிறது.
Also Read : நெருங்கிய நண்பருக்கு மொத்தத்தையும் வாரிக் கொடுத்த அஜித்.. ரகசியமாய் வெளிநாடுகளில் செய்யும் வேலை
மேலும் அஜித் எப்போதுமே தனது படத்திற்கு ப்ரமோஷன் செய்ய மாட்டார். ஆனால் துணிவு படத்திற்கு ப்ரமோஷன் நடக்க உள்ளதாகவும் அதில் அஜித் பங்கு பெறுவார் என ஒரு வதந்தி கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அஜித் ஒரு நல்ல படமே அதற்கான பிரமோஷன் என்று கூறிவிட்டார்.
ஆனால் அஜித் புகைப்படங்கள் வெளியாகி வருவது துணிவு படத்திற்கான ப்ரமோஷன் என்று சிலர் கூறி வருகிறார்கள். அதாவது விஜயின் வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவு படம் வெளியாவதால் அஜித் பயத்தில் இருப்பதால் இவ்வாறு புகைப்படங்கள் மூலம் படத்தை பிரமோஷன் செய்து வருகிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.
இப்போது தனது காதல் மனைவியான ஷாலினியுடன் அஜித் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு இவர்கள் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. அஜித் ரசிகர்களால் இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read : அஜித்துக்கு ஏன் இப்படி ஒரு பிடிவாதம்.. வெளிவந்தது விட்டுக்கொடுக்காததன் ரகசியம்