ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

விஜய்க்கு போன் போட்டு ஒரே போடாக போட்ட அஜித்.. ஆடிப் போன வெற்றி கழகம்

Ajith: சினிமாவை பொருத்தவரையில் போட்டி நடிகர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித் இருவரும் தற்போது வரை நெருங்கிய நண்பர்களாக தான் பழகி வருகிறார்கள். அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்போது விஜய் கோட் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக இருக்கிறது. இந்த சூழலில் சமீபத்தில் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி மற்றும் பாடலை வெளியிட்டு இருந்தார். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

இந்நிலையில் கோட் செட்டில் வெங்கட் பிரபு அஜித்துக்கு போன் போட்டுள்ளார். அப்போது விஜய் இடம் போன் காலை கொடுத்து பேசி உள்ளார். அப்போது விஜய்யின் அரசியல் கட்சியைப் பற்றி அஜித் நிறைய விஷயங்களை பேசினாராம்.

விஜய் இடம் போனில் பேசிய அஜித்

மேலும் உங்களின் அடுத்தடுத்த நகர்வை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதோடு 2026 தேர்தலில் வெற்றி உங்களுக்கு தான் என்று அஜித் கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே அரசியலில் சினிமா பிரபலங்கள் தான் பெரும்பாலும் ஆட்சி செய்து வருகிறார்கள்.

அதுவும் இப்போது உள்ள அரசியல் கட்சிகள் பல பிளவுகளாக உள்ளது. சரியான சமயத்தில் விஜய் அரசியலுக்குள் நுழைந்து இருப்பதால் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத்தான் அரசியல் களத்தில் பேசப்படுகிறது.

மேலும் விஜய் இடம் இப்போது அஜித் போன் கால் செய்து பேசியது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இப்போது அஜித் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மேலும் அஜித் ரசிகர்கள் இப்போது விடாமுயற்சி படத்திற்காக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எட்டுத்திக்கும் பறக்கும் விஜய்யின் கொடி

Trending News