செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

சத்தமில்லாமல் சம்பவம் செய்த அஜித்.. கோட் படத்தை எட்ட நிற்க வைத்த விடாமுயற்சியின் சாதனை

Vidaamuyarchi: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம், விஜய் நடித்த கோட் படத்தின் சாதனையை முறியடித்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆக இருக்கும் நிலையில் படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பொது ஜன ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். இன்னொரு பக்கம் அஜித் தன்னுடைய இமேஜை இறக்கி கொண்டு இந்த படத்தில் நடித்து தப்பு செய்துவிட்டார் என கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

சத்தமில்லாமல் சம்பவம் செய்த அஜித்

கதை நல்லா இருக்கு, ஆனா அஜித்தோட மாஸ் இல்லையே என எல்லோருமே வருத்தப்பட்டார்கள். ஆனால் நல்ல கதை எங்கு நின்று பேச வேண்டுமோ அங்கு பேசும் என்பதை நிரூபித்திருக்கிறது விடாமுயற்சி.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து ரிலீஸ் ஆகி இருக்கும் விடாமுயற்சி படத்திற்கு IMDB ரேட்டிங் கொடுத்திருக்கிறது. 10 மதிப்பெண்ணுக்கு 8.2 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறது விடா முயற்சி.

விஜய் நடித்த கடந்த ஆண்டில் ரிலீஸ் ஆன கோட் படம் IMDB ரேட்டிங்கில் பத்துக்கு 5.8 மதிப்பெண்கள் தான் பெற்றிருக்கிறது.

Trending News