திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சர்வதேச அளவில் புது நிறுவனத்தை தொடங்கிய அஜித்.. திரையுலகை மிரள விட்ட அறிவிப்பு

துணிவுக்கு பின்பு அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடமுயற்சி என்ற படத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகி கொண்டு இருக்கிறார். தற்போது அஜித் சர்வதேச அளவில் புதிய நிறுவனத்தை உருவாக்கி உள்ளதை தனிப்பட்ட முறையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு திரையுலகையை மிரள விட்டிருக்கிறார்.

பைக் மற்றும் கார் ரேசில் அதிக ஈடுபாடு கொண்ட அஜித், ‘யான் பெற்ற இன்பத்தை யாவரும் பெற வேண்டும்’ என்பதற்காக புதிதாக ‘ஏகே மோட்டோ ரைடு’ என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் இந்திய அளவில் இயற்கை அழகு கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி அழகான சர்வதேச சாலைகளிலும் பயணம் மேற்கொள்ள ஆர்வமாக இருக்கும் பைக் ரைடர்ஸ், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு ஏகே மோட்டோ ரைட் நிறுவனத்தின் மூலம் அத்தனை ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

Also Read: தளபதி 68 மல்டி ஸ்டார் படமா? விளக்கம் கொடுத்த வெங்கட் பிரபு

மேலும் இதில் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேற்கொள்பவர்களின் வசதிக்கும் ஏற்ப முழுவதிலும் நம்பிக்கை தன்மை மற்றும் செயல் திறனை உறுதி செய்து, அவர்களுக்கு வழங்கும் மோட்டார் பைக்குகள் உன்னிப்பாக பராமரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வழங்கப்படும்.

மேலும் இந்த சுற்றுலா பயணத்தை மேற்கொள்பவர்களுடன் தொழில் முறை வழிகாட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுற்று பயணங்களில் முழு நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களும் உடன் இருப்பார்கள். மேலும் உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகள் பற்றி விரிவாக அறிந்து கொண்டவர்கள் சுற்றுலா ரைடர்களுடன் தொடக்கம் முதல் இறுதி வரை கூடவே இருப்பார்கள்.

Also Read: உச்சகட்ட அப்செட்டில் மகிழ்திருமேனி.. அஜித்திடம் மாட்டிக் கொண்ட பரிதாபம்

இந்த நிறுவனத்தின் மூலம் அவர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக பயணத்தை வழங்குவார்கள் என்றும் அஜித் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விடாமுயற்சி படப்பிடிப்பு மிக தாமதமாக துவங்கப்படும் நிலையில் அஜித் படங்களில் நடிப்பதை காட்டிலும் பைக் ரைட்டில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

அவரை போலவே ஆர்வத்துடன் இருக்கும் ரைடர்ஸ்களுக்கு இந்த ஏகே மோட்டோ ரைட் உறுதுணையாக இருக்கப் போகிறது. இந்த புதிய நிறுவனத்தை துவங்க வேண்டும் என அஜித் நீண்ட நாட்களாகவே திட்டம் போட்டு இருந்தார். அதை இப்போது செயல்படுத்தியது அவருக்கு மிகுந்த மன நிறைவை அளித்துள்ளது.

Also Read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

- Advertisement -

Trending News