விஜய்-யின் முன்னேற்றம் பிடிக்காத ஆளும் அரசியல் கட்சிகள் அஜித்தை வைத்து விஜய்க்கு கட்டம் கட்டி உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அதாவது அஜித்திற்கு வழங்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருது விஜய்யை பழி வாங்குவதற்காக தான். விஜய்யின் அரசியல் கட்சி பலமாய்ந்ததாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அதை ஒழித்துக் கட்ட அஜித்தை ஒரு கருவியாக பயன்படுத்தி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். விஜய் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனால் விஜய்யின் வளர்ச்சியை கெடுப்பதற்கு என்னென்ன வேலைகள் உண்டு அத்தனையும் செய்து வருகின்றனர். விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் Blue Tick சில மணி நேரங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அரசியலில் புதுப்புது மாற்றங்களை கொண்டு வர முயலும் விஜய் புதிதாக ஜனநாயகன் என்ற மீடியா சேனலையும் உருவாக்க உள்ளார். ரசிகர் கூட்டமே வேண்டாம் என இருக்கும் அஜித் இது போன்ற அரசியல் சூழ்ச்சியில் சிக்க மாட்டார் என்பதுதான் உண்மை.
எப்படியும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு மறைமுகமாக தனது ஆதரவை அஜித் தெரிவிப்பார் என்று ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி தெரிவித்துவிட்டால் விஜய்க்கு ஓட்டின் சதவீதம் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.