வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தியேட்டரில் மட்டும் இல்லாமல், எல்லா இடத்திலும் பட்டையை கிளப்பும் துணிவு.. ரெக்கார்ட் பிரேக் செய்த டார்க் டெவில் அஜித்

இப்போது அஜித்தின் ஏகே 62 படத்தை பற்றி பரபரப்பாக பேசி வந்தாலும் இன்னும் துணிவு படத்தை பற்றியும் பெரும்பாலான ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அதாவது கடந்த பொங்கல் பண்டிகைக்கு வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவான துணிவு படம் வெளியானது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் கலையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் அதற்கு நேர் எதிராக துணிவு படத்திற்கு ஏக போக வரவேற்பு கிடைத்து வருகிறது. துணிவு படத்திற்கு போட்டியாக வெளியான அனைத்து படங்களின் வசூலை முறியடித்து இப்படம் நல்ல வசூலை பெற்றது.

Also Read : 4 மாதங்கள் கெடு கொடுத்த அஜித்.. செய்வதறியாமல் முழிக்கும் இயக்குனர்

மேலும் துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதாவது துணிவு படத்திற்கு தியேட்டரில் மட்டும் அல்லாமல் ஒடிடியிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. நெட்பிளிக்ஸில் துணிவு பட டார்க் டெவில் அஜித் ரெக்கார்ட் பிரேக் செய்துள்ளார்.

நேற்றைய தினம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒடிடியில் துணிவு படம் வெளியாகி இருந்தது. இதுவரை நெட்பிளிக்ஸில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இவ்வளவு வாடிக்கையாளர்கள் எந்த படத்தையும் பார்த்ததில்லை.

Also Read : லண்டனில் இருந்து வெளிவரும் ஏகே-62 அப்டேட்.. லியோவால் பதுங்கிய அஜித் பாயும் நேரம் இது

ஆனால் திரையரங்குகளில் வெளியான பின்பு தான் ஒடிடியில் துணிவு படம் வெளியானாலும் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்து உள்ளனர். அதனால் தான் படம் வெளியான உடனே நெட்பிளிக்ஸை ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர். மேலும் துணிவு படத்தின் மூலம் நெட்பிளிக்ஸ் நல்ல லாபத்தை பார்த்து வருகிறது.

அதுமட்டுமின்றி தற்போது அஜித்துக்கு துணிவு படத்தின் வெற்றியின் மூலம் மார்க்கெட் மற்றும் சம்பளம் எகிறி உள்ளது. இதனால் தற்போது அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாம். மேலும் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் முன்கூட்டியே சூதானமாக நெட்பிளிக்ஸ் கை பற்றியது.

Also Read : தளபதி கைவிட்டதால் அஜித்தை தட்டி தூக்கிய மகிழ் திருமேனி.. அதிர்ஷ்டம் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகுது

Trending News