புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஹெச் வினோத்தை துரோகி என 4 வருடம் ஒதுக்கிய அஜித்.. சண்டையை மூட்டிவிட்ட இயக்குனர்

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை அடுத்து மீண்டும் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு உரசல் தற்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

அதாவது வினோத் சதுரங்க வேட்டை திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்த சமயம் அஜித்தைப் பார்த்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். அந்த கதையை கேட்டு மிகவும் பிடித்துப் போன அஜித் இதை நாம் கட்டாயம் பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

அதன் பின்னர் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படத்தை இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தார். இதனால் வினோத் எப்பொழுதும் லிங்கு சாமியின் ஆபீஸில் தான் முக்கால் வாசி நேரம் இருந்திருக்கிறார்.

அதனால் அவர் அஜித்துக்கு கூறிய கதையை பற்றி லிங்குசாமியிடம் மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறார். அவரும் அந்தக் கதை நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். பின்னர் ஒரு மேடை விழாவின்போது லிங்குசாமி வினோத்திடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் நாங்கள் ஒரு படம் பண்ண இருக்கிறோம் சூர்யா தான் ஹீரோ என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

ஏனென்றால் அந்த சமயத்தில்தான் சூர்யா, லிங்குசாமியிடம் அடுத்த படத்திற்கு கால்ஷீட் தருகிறேன் என்று கூறி இருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் சூர்யா மற்றும் வினோத் இருவரிடமும் இதைப்பற்றி கலந்தாலோசிக்காமல் இப்படி வார்த்தையை அள்ளி விட்டிருக்கிறார்.

விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் நம்மிடம் கதையைக் கூறிய வினோத் இப்படி செய்துவிட்டாரே என்று அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் அவர் வினோத்தை நான்கு வருட காலம் ஒதுக்கி வைத்து விட்டாராம். அதன்பின் அவர் அஜித்தை சந்தித்து என்ன நடந்தது என்று விளக்கிக் கூறிய பின்பு தான் அவர் சமாதானம் அடைந்தாராம். அதன் பிறகுதான் அவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தது.

Trending News