அஜித் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அஜித் பல கேலி, கிண்டலுக்கு உள்ளாகி இருந்தார். அப்போதெல்லாம் ரஜினியை போல அஜித்தும் ஒரு முடிவு எடுக்கலாம் என்று நினைத்திருந்தார்.
அதாவது ரஜினி கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் சினிமாவில் நடிக்கும் வந்த புதிதில் மொழி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நடிப்பு திறமையும் அவருக்கு இல்லை என இயக்குனர்கள் திட்டி உள்ளனர். இதனால் ஆதங்கப்பட்ட ரஜினி சினிமாவை விட்டு விலகிடலாம் என்று நினைத்தார்.
Also Read : துரோகங்களையும், அவமானங்களையும் சந்தித்து இறுகிப்போன அஜித்.. புட்டு புட்டு வைக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்
அப்போது தான் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் ரஜினிக்கு அறிவுரை கூறி மீண்டும் சினிமாவில் நடிக்க வைத்தார். மேலும் பாலச்சந்தர் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து ரஜினியை முன்னணி நடிகராக வளர்த்து விட்டார். அதேபோல் அஜித்தும் ஒரு கட்டத்தில் சினிமாவை தல முழுகலாம் என நினைத்தார்.
அதாவது அஜித் ஆசை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தனக்கு டயலாக் பேச தெரியவில்லை, நடிக்க தெரியவில்லை என அவருக்குள்ளாகவே தன்னம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார். மேலும் ஒவ்வொரு காட்சியில் நடித்த பிறகும் பிரகாஷ்ராஜிடம் நன்றாக நடித்திருக்கிறேனா என கேட்டுக் கொண்டே இருப்பாராம்.
அதற்கு பிரகாஷ்ராஜும் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள் வருங்காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருவீர்கள் என அடிக்கடி சொல்வாராம். மேலும் பிரகாஷ்ராஜ் கொடுத்த உத்வேகத்தால் மீண்டும் நம்பிக்கையுடன் அஜித் படங்களில் நடிக்க தொடங்கினாராம். அதுமட்டும்இன்றி அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போதும் பிரகாஷ்ராஜிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவாராம்.
இவ்வாறு பிரபல நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் ஆரம்பத்தில் தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும் சிலர் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக தங்களின் திறமையை நிரூபித்து உள்ளார்கள். மேலும் ரஜினி, அஜித், விஜய் போன்றவர்களும் இந்த லிஸ்டில் இருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது.