செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

உள்ளூர்ல நீங்க பாத்துக்கோங்க வெளியூர்ல நாங்க பாத்துக்குறோம்.. துணிவிற்காக களம் இறங்கிய லைக்கா

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகிறது. இதனால் இந்த படத்தின் வியாபார பணிகள் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இதைத் தொடர்ந்து துணிவு படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படி உள்ளூரில் நீங்க பார்த்துக்கோங்க வெளியூரில் நாங்க பார்த்துக்கிறோம் என்று துணிவு படத்திற்காக லைக்கா களம் இறங்கி இருப்பது அதிரடி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Also Read: முடிவுக்கு வந்த அண்ணன், தம்பி உறவு.. காசு விஷயத்தில் கரார் காட்டியதால் அஜித் செய்யப்போகும் காரியம்

மேலும் அஜித்தின் 62-வது படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அஜித்தின் 61-வது படமான துணிவு திரைப்படத்தையும் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா பெற்றிருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி துணிவு படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு படமும் வெளியாக்குவதால், இந்த இரண்டு படத்திற்கான பட ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளனர். அதிலும் வெளிநாட்டில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை பெற்ற லைக்கா கொஞ்சம் அதிகமாகவே ப்ரோமோஷன் செய்ய பார்க்க உள்ளனர்.

Also Read: விஜய் ரசிகர்களுக்கு சூசகமாக அறிவுரை சொன்ன அஜித்.. இதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துறதா!

அத்துடன் எட்டு வருடங்களுக்கு பின்பு தல, தளபதி இருவருடைய படமும் மீண்டும் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதால் கோலிவுட் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த பொங்கல் பண்டிகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களின் வியாபாரமும் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் துணிவு, வாரிசு இரண்டு படங்களில் எந்த படம் வசூலில் வெற்றி பெறும் என்பதை சோசியல் மீடியாவில் தல, தளபதி ரசிகர்கள் இப்போது இருந்தே அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

துணிவு படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை கைப்பற்றிய லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ்

lyca-cinemapettai
lyca-cinemapettai

Also Read: முக்கிய மாவட்டங்களை சூழ்ச்சி செய்து வளைத்துப் போட்ட உதயநிதி.. வாரிசு வசூலை சுக்குநூறாக்க போகும் அஜீத்

Trending News