Vidaamuyarchi Trailer: விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால் சிலர் தடைகளின் காரணமாக பொங்கல் ரேசிலிருந்து அது விலகியது.
இல்லை என்றால் இந்நேரம் தியேட்டர்கள் ஆனால் பறந்திருக்கும். இருந்தாலும் அஜித் ரசிகர்கள் அவர் கார் ரேஸில் வென்றதை தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் இன்று விடாமுயற்சி ட்ரெய்லர் வெளியாகும் என அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியுடன் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
ரிலீஸ் தேதியோடு வெளியான அசத்தல் ட்ரெய்லர்
அதன்படி பிப்ரவரி ஆறாம் தேதி விடாமுயற்சி உலகம் எங்கும் வெளிவர இருக்கிறது. மேலும் ட்ரைலர் முழுக்க ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கிறார் அஜித்.
திரிஷாவுடன் ரொமான்ஸ், லவ் போன்ற காட்சிகளுடன் வில்லன்களை அவர் பந்தாடும் காட்சிகளும் வேற லெவலில் இருக்கிறது.
நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு இது செம விருந்தாக இருக்கும். ஆக மொத்தம் பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்திருக்கும் விடாமுயற்சி தியேட்டரில் அலப்பறையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.