Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி நீண்ட காலமாக இழுத்து அடித்து வருகிறது. ரசிகர்களும் படம் எப்போது வெளிவரும் என கேட்டு நொந்து போனது தான் மிச்சம்.
அதனாலேயே அஜித் தன்னுடைய அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டதோடு போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை கூல் செய்தார். அதைத்தொடர்ந்து விடாமுயற்சி பிரச்சனையும் சரி செய்யப்பட்டு ஒவ்வொரு போஸ்டராக வெளியானது.
அதில் திரிஷாவுடன் அஜித் இளமையான லுக்கில் இருந்த போட்டோ பயங்கர ட்ரெண்டானது. அதை தொடர்ந்து தற்போது வில்லன் ஆரவ்வின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் கூலிங் கிளாஸ் போட்டு ஜிப்பில் உட்கார்ந்தபடி கூலாக போஸ் கொடுத்துள்ளார்.
கூலாக போஸ் கொடுத்த ஆரவ்
இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கும் நிலையில் இந்த லுக் செம கிளாஸ் ஆக இருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நமக்கு அறிமுகமான இவர் டைட்டிலையும் தட்டி தூக்கினார்.
அதில் சில சர்ச்சைகளில் சிக்கினாலும் இப்போது அவர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதில் விடாமுயற்சி அவருக்கான திருப்புமுனை படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படத்திற்கு பிறகு அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும்.
அந்த அளவுக்கு அவர் இப்படத்தில் மிரட்டி இருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் இந்த போஸ்டர் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த போஸ்டரை வெளியிட்ட விடாமுயற்சி டீம்
- 32 வருஷமாக விடாமுயற்சியுடன் வெற்றியை தக்கவைத்த அஜித்
- அஜித் பூசணிக்காய்க்கும், பூஜைக்கும் பார்த்த நாள்
- அஜர்பைஜானில் இருந்து வந்தவுடன் அஜித் செய்த விஷயம்