ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹிட் படம் கொடுத்து 10 வருஷம் ஆச்சு.. விஜய் அஜித் என இயக்கியும் பெயிலியரால் நொந்து போன இயக்குனர்

Ajith – Vijay: வளர்ந்து வரும் இயக்குனர்களை பொறுத்த வரைக்கும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்குவது என்பது இவர்களுக்கு மிகப்பெரிய கனவாகவே இருக்கும். எத்தனை வெற்றி படங்களை கொடுத்தாலும் டாப் ஹீரோக்களை நெருங்குவது என்பது இவர்களால் முடியாத விஷயமாக கூட இருக்கும். ஆனால் இந்த இயக்குனர் அடுத்தடுத்து அஜித் மற்றும் விஜய் என உச்ச நட்சத்திரங்களை வைத்து வெற்றி படம் கொடுத்துவிட்டு தற்போது வேறு ஒரு வெற்றி படத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

முதல் படத்திலேயே நடிகர் அஜித்குமாரை இயக்கிய ஏ எல் விஜய் தான் அந்த இயக்குனர். நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய இவர் புகழ்பெற்ற தயாரிப்பாளர் அழகப்பனின் மூத்த மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். சினிமாவில் அறிமுகம் என்பதே முன்னணி ஹீரோவின் இயக்குனராக இவருக்கு கிடைத்தது. அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read:விஜய் சினிமாவை விட்டு விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத படம் என்றால் அது மதராசபட்டினம் தான். ஆர்யா மற்றும் எமி ஜாக்சனை வைத்து இவர் இயக்கிய இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிவிட்டது. சுதந்திரத்திற்கு முன் இருந்த சென்னையை அப்படியே கண்முன் கொண்டு வந்த இவர், அழகான காதல் கதையையும் சொல்லி ரசிகர்களின் மனதை வென்ற இயக்குனர்.

ஒரு வெற்றி படம் கொடுத்த இயக்குனர்களை சட்டென காணாமல் போய்விடும் சினிமா உலகில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வளர்ந்து கொண்டே இருந்தார் விஜய். நடிகர் சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் மற்றும் தெய்வத்திருமகள் என தொடர்ந்து ஹிட் படம் கொடுத்தார். இவர் இயக்கத்தில் உணர்ச்சி பூர்வமான கதைக்களத்தை கொண்ட சைவம் திரைப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது.

Also Read:சினிமா ஆசையை விட்டுவிட்டு ஆடு புலி ஆட்டம் ஆடப்போகும் விஜய்.. சீக்ரட்டாய் நடக்கும் ஒத்திகை

ஏ.எல் விஜய்யின் அடுத்தடுத்த வெற்றிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இயக்கத்தில் உருவான தலைவா திரைப்படம் அரசியல் ரீதியாக பல சிக்கல்களை சந்தித்தாலும், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்துவிட்டது. இப்படி தொடர் ஹிட்டுகளை கொடுத்து வந்த ஏ.எல் விஜய் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்னும் படத்தை இயக்கினார்.

இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்திற்குப் பிறகு விஜய் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை. வெற்றி முகமாக துவங்கிய இவருடைய சினிமா பயணம், தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இவர் அடுத்து என்ன படம் பண்ணப் போகிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற எந்த அப்டேட்டுகளும் இதுவரை வெளியாகவில்லை.

Also Read:மொத்தத்தில் ரூட்டை போட்டுக் கொடுத்த விஜய்.. ஜிவி பிரகாஷ், ப்ரியா பவானி சங்கர் போடும் ஆட்டம்

Trending News