செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா அஜித் மற்றும் விஜய்.? இன்னும் தெளிவு பெறாத சினிமா மோகம்

கோலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர்கள் தான் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு தீவிரமான ரசிகர்கள் என ஒரு பட்டாளமே உண்டு. இவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற அளவுக்கு இந்த ரசிகர்கள் கண் மூடித்தனமாகவும் இருக்கிறார்கள். இருவருடைய படங்களில் ஒன்று ரிலீஸ் ஆனாலே எல்லா திரையரங்கும் களைகட்டும். இதில் இந்த வருடம் இருவரின் படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகின.

இந்த படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே அக்கப்போர் தொடங்கி விட்டது. துணிவு 1 மணி காட்சி,வாரிசு 4 மணி காட்சி என அன்றைய நாள் பெரும் பரபரப்பாக சென்றது. எப்போதுமே இவர்களுடைய படங்கள் ரிலீஸ் ஆகும் போது கொண்டாட்டம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதை விட அதிகமாக விபத்துகளும், இழப்புகளும் இருக்கும்.

Also Read: அஜித் சாரை பார்த்து கத்துக்கோங்க.. மனைவியிடம் திட்டு வாங்கிய வாரிசு நடிகர்

அதே போன்ற சம்பவம் தான் இந்த வருடமும் நடந்து இருக்கிறது. தற்செயலாக தான் நடந்தது என இது போன்ற சம்பவங்களை சிலர் கூறினாலும், இதற்காக சம்மந்தப்பட்டவர்கள் வாய் திறக்காமல் இருப்பதே வருத்தம் அளிக்கிறது. தன்னுடைய ரசிகர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார் என தெரிந்தும் அஜித் இன்றளவும் அதை பற்றி எதுவுமே பேசவில்லை.

இருவரின் படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ததால் தமிழ்நாட்டின் திரையரங்குகள் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு இருக்கிறது. இரு தரப்புக்கும் நடந்த பிரச்சனையில் பல தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. பல பேருக்கு கை கால்கள் உடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read: சதுரங்க வேட்டை பாணியில் வினோத்துக்கு நடந்த அநியாயம்.. துணிவு உருவாக காரணம் இதுதான்

ஆனால் இன்றுவரை இந்த இரண்டு நடிகர்களும் இந்த சம்பவங்கள் பற்றி வாயை திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். படத்தின் வெற்றிக்காக நிர்வாகிகளை அழைத்து பிரியாணி விருந்து வைத்து, ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ஏக வசனம் பேசி தள்ளிய நடிகர் விஜய் கூட இப்பொழுது வாய் திறக்காமல் இருப்பது பேசு பொருளாகிவிட்டது.

இரண்டு நடிகர்களும் அவர்கள் ஒற்றுமையாக இருந்து ரசிகர்களை பயன்படுத்துவது நன்றாக தெரிகிறது. இதை ரசிகர்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இழப்பு என்பது சம்மந்தப்பட்ட குடும்பத்திற்கு தானே தவிர அந்த நடிகர்களுக்கு இல்லை. அவர்கள் இதை பற்றி கண்டு கொள்ள போவதும் இல்லை. சினிமா மோகத்தினால் அடித்து கொள்ளும் இளைஞர்கள் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

Also Read: இவரு என்ன வகையறான்னு தெரியல.. எதையுமே கண்டுக்காத அஜித்தையே யோசிக்க வைத்த வினோத்

Trending News