புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விக்ரமை மேடையில் கடுப்பேற்றிய அஜித்.. வாய்க்கு வந்தபடி உளறியதால் ஏற்பட்ட பிரச்சினை

Ajith and Vikram: சினிமாவில் பேரும், புகழையும் அடைவதற்கு ஒவ்வொருவரும் படாத பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு எதிராக இருக்கும் நபருடன் போட்டி போட்டுக் கொண்டு மோதிக் கொள்வார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் விக்ரம் அஜித் ஒரு சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்திருந்தாலும் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது ஆரம்ப காலத்தில் விக்ரம் ஒரு சப்போர்ட்டிங் கேரக்டரில் தான் நடிக்கும் படியாக வாய்ப்பு கிடைத்தது. அப்படிதான் பல படங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் ஒரு அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அதில் அஜித், விக்ரம் மற்றும் பல முன்னணி நடிகர்கள் கலந்து இருக்கிறார்கள். அத்துடன் அஜித்துக்கு சிறந்த நடிகர் என்கிற அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அஜித் மேடை ஏறி அவார்டை வாங்கிய பொழுது, இந்த வருடம் பெஸ்ட் நடிகருக்கான அவார்டை நான் வாங்குகிறேன். அடுத்த வருஷமும் நான் தான் வாங்குவேன், அதற்கு அடுத்த வருஷமும் நான் தான் தொடர்ந்து வாங்குவேன் என்று விக்ரமை பார்த்து சொல்லி கடுப்பேற்றி இருக்கிறார். அந்த நேரத்தில் விக்ரம் எப்படியாவது வாய்ப்பைக் கெட்டியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று போராடிய தருணம்.

Also read: 4 முறையாக தொடரும் அஜித்- திரிஷாவிற்கான சென்டிமென்ட்.. விடாமுயற்சியிலாவது மாற்றுவாரா மகிழ்திருமேனி?

அப்பொழுது அஜித் இந்த மாதிரி சொன்னதும் அவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் அடுத்தடுத்த படங்களில் வெறிகொண்டு நடிக்க ஆரம்பித்தார். அப்படி நடித்த படம் தான் சேது. இதில் கிடைத்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி எந்த அளவிற்கு நடிக்க முடியுமோ அதை டபுள் மடங்காக கொடுத்து விருது வாங்கும் அளவிற்கு வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து உடலை வருத்தி, இமேஜை கூட பெருசாக யோசிக்காமல் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி நடிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டார். அதனால் தான் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இவரால் வர முடிந்தது. இதற்கிடையில் அஜித்துக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் இப்பொழுது வரை ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.

Also read: கௌதம் மேனன் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. கண்டும் காணாமல் எஸ்கேப் ஆன விக்ரம்

Trending News