சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஹாலிவுட் படங்களை ஓரங்கட்டிய அஜித்.. உலகளவில் ஒரே வாரத்தில் துணிவு செய்த சாதனை

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு வரலாறு காணாத அளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் அஜித் இதுவரை இல்லாத அளவுக்கு வெறித்தனமாக நடித்து மாஸ் காட்டி இருப்பது தான். அதனாலேயே படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே நல்ல ஓப்பனிங் பெற்ற துணிவு திரைப்படம் தியேட்டரில் மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் மாஸ் காட்டி வருகிறது. அந்த வகையில் கடந்த எட்டாம் தேதி இப்படம் நெட் பிளிக்ஸ் தளத்தில் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. இந்தப் படத்துடன் சேர்ந்து வெளியான வாரிசு திரைப்படமே இன்னும் வெளியாகாத நிலையில் இவ்வளவு சீக்கிரம் துணிவு வெளியானது பலருக்கும் ஆச்சரியம் தான்.

Also read: விஜய் அஜித்திற்கு இணையாக போட்டி போடும் ஹீரோ.. 50 கோடி சம்பளம் கேட்கும் வில்லன் ஹீரோ

ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் போக்கும் வகையில் இப்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தியேட்டரில் படத்தை பார்த்த ரசிகர்கள் கூட இப்படத்தை தினமும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் துணிவு பெற்றிருக்கிறது.

அதன்படி அந்த தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் எந்த அளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது என்ற ரிப்போர்ட் ஒவ்வொரு வாரமும் வெளியாகும். அதன்படி கடந்த வாரம் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 திரைப்படங்களில் துணிவு மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் அந்த பத்து படங்களில் துணிவு மட்டும்தான் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: அஜித் கேரியரில் இதுவரை நடக்காத பிரச்சனை.. வெற்றியோ, தோல்வியோ பயமுறுத்தும் 2 சம்பவங்கள்

மற்ற அனைத்தும் ஹாலிவுட் திரைப்படங்கள் தான். அந்த வகையில் துணிவு திரைப்படம் இதுவரை 40 லட்சத்து 50 ஆயிரம் மணி நேரங்களை கடந்து இருக்கிறது. அதுவும் இப்படம் ஓடிடியில் வெளிவந்த ஒரு வாரத்திலேயே இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அதேபோன்று இதற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் துணிவு திரைப்படத்தின் ஹிந்தி டப்பிங் இருக்கிறது.

இந்த விஷயம் தற்போது திரையுலகில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹாலிவுட் படங்களை எல்லாம் ஓரம் கட்டி மாஸ் காட்டி வரும் அஜித்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து சாதனைகள் செய்து வரும் இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 திரைப்படமும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Also read: அஜித்தை திருப்திபடுத்திய மகிழ்திருமேனி.. லைக்கா கொடுக்காததை கொடுத்து உதவிய ஏகே

Trending News