சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

துரோகங்களையும், அவமானங்களையும் சந்தித்து இறுகிப்போன அஜித்.. புட்டு புட்டு வைக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்

அஜித் சினிமாவிற்குள் நுழைவதற்கு எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அவருக்கு ஓரளவுக்கு பேர் வாங்கிக் கொடுத்தாலும் தொடர்ந்து வந்த படங்களால் தோல்வியை மட்டும் பார்த்தார். ஆனாலும் எந்த நேரத்திலும் துவண்டு போகாமல் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் நடித்தார்.

அப்படி இவர் ஆரம்ப காலத்தில் நடித்த வாலி, ஆசை படத்தின் மூலம் இவருக்கு நெருங்கிய நண்பராக நடிகர் மாரிமுத்து இடம் பழகினார். இவர் யார் என்றால் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் குணசேகரன் தான். இவர்கள் அவ்வப்போது பைக்கில் ஒன்றாகப் போவதும், சூட்டிங் இல் சேர்ந்து இருப்பதும், மணிக்கணக்காக ஒருவரை ஒருவர் பேசிக் கொள்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் போன்று இவர்களுடைய பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

Also read: ‘ராஜா’ படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்த மாமி நடிகையின் தற்போதைய புகைப்படம் .. என்னது கணவர் பெரிய பிளாப் நடிகரா !

அந்த நேரத்தில் தான் குணசேகரனின் மகன் ஸ்கூலில் அட்மிஷன் கிடைத்தும் பணவசதி இல்லாததால் சேர்க்க முடியாமல் தவித்து இருக்கிறார். இதை பார்த்த அஜித் இவரிடம் ஸ்கூல் சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் கேட்ட பிறகு நேரடியாக இவர் போய் பணத்தை கட்டி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு குணசேகரன் எதுவுமே இவரிடம் கேட்கவே இல்லை. ஆனால் அஜித், அவருடைய பையனின் படிப்பு செலவை எட்டாம் வகுப்பு வரை அவர் தான் எல்லாம் பார்த்து கட்டி இருக்கிறார்.

இதனை எடுத்து ஒரு கட்டத்திற்கு பிறகு அதாவது சிறுத்தை சிவா உடன் படங்களில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இவர்களுடைய கொஞ்சம் பழக்க வழக்கங்கள் குறைந்து கொண்டே வந்துவிட்டது. அதற்கு காரணமும் அவர் சினிமாவில் சந்தித்த துரோகங்களும், அவமானங்களும் தான் அவரை இந்த அளவுக்கு இறுக்கமாக வைத்திருக்கிறது. அதனால் தான் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதும் கிடையாது.

Also read: அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

அவருடைய குடும்பம் மனைவி, குழந்தைகள் இது மட்டும் தான் அவருடைய சந்தோசம். இவர்கள்தான் நமக்கு உண்மையானவர்கள் என்று அந்த கட்டத்திற்குள்ளையே போய்விட்டார். ஆனாலும் அவர் வீட்டில் வேலை பார்க்கும் அனைவருக்கும் மொத்தமாக ஒரு 25 பேர் கிட்ட வேலை பார்க்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அவர்களின் ஏரியாவில் சொந்த வீடும், அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் இப்போது வரை அஜித் தான் பார்த்து வருகிறார்.

இவர் இந்த மாதிரியான நல்ல விஷயங்கள் சைலண்டாக செய்வது மற்றவர்களுக்கு தெரியுதோ, இல்லையோ அவர் மனதிருப்திக்காக இதை இப்பொழுது வரை செய்து கொண்டுதான் இருக்கிறார். அத்துடன் இவர் செய்யும் தர்மம் இவரை தலைகாக்கும். அதனால் தான் அஜித் தற்போது பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இந்த மாதிரியான நல்ல விஷயங்களை செய்து வரும் அஜித்திற்கு நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

Also read: காலில் விழுந்து கெஞ்சும் குணசேகரனின் அம்மா.. எதிரி வீட்டில் கதி கலங்கிய பச்சோந்தி குணசேகரன்

Trending News