வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஏ ஆர் முருகதாஸை வெறுத்து ஒதுக்கிய அஜித், சிக்கிய விஜய்.. இன்று வரை இணையாததற்கு இதுதான் காரணம்

தமிழ் திரையுலகில் கஜினி, ரமணா உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் தான் ஏ ஆர் முருகதாஸ். தீனா படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அப்படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதனாலேயே அஜித், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்கள் இருவரும் வேறு எந்த படத்திலும் இணையவில்லை. இடையில் அஜித், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வரை அது நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவரின் மேல் அஜித்துக்கு இருந்த கோவம் தான்.

Also read: வாரிசு படத்தை போல் துணிவுக்கு ஏற்பட்ட சிக்கல்.. ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் உச்சகட்ட டென்ஷனில் அஜித்

அதாவது விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் கதை அறம் படத்தின் இயக்குனர் கோபி நயினாருக்கு சொந்தமானது என ஒரு பிரச்சனை வெடித்தது. அதை திருடி தான் முருகதாஸ் கத்தி திரைப்படத்தை எடுத்தார். இது அஜித்துக்கு தெரிய வந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதனால் ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை கழட்டி விட்டு விஜய்யை அதில் நடிக்க வைத்தார். அதன் பிறகு லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. அது மட்டுமல்லாமல் இந்த படம் குறித்து எந்த கேள்வியும் கேட்க முடியாத அளவுக்கு கோபி நயினார் அசிங்கப்படுத்தப்பட்டார்.

Also read: ஒரே நடிகருக்காக அடித்துக்கொண்ட H.வினோத், வம்சி.. கடைசியில் தட்டி தூக்கிய வாரிசு

அதை தொடர்ந்து விஜய் நடித்த சர்க்கார் படத்தின் கதையும் மற்றொருவருக்கு சொந்தமானது என்று பிரச்சனை கிளம்பியது. இதன் மூலம் ஏ ஆர் முருகதாஸ் சொந்தமாக கதை எழுத மாட்டார் என்றும், அடுத்தவர் கதையை ஆட்டையை போட்டு படம் எடுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இதை முன்பே தெரிந்ததால் தான் அஜித் இன்று வரை அவரை பக்கத்தில் சேர்க்காமல் இருக்கிறார். ஆனால் பாவம் விஜய் அவருடன் கூட்டணி அமைத்து படாத பாடுபட்டார்.

அதன் பிறகு விஜய் அவருடைய இயக்கத்தில் நடிக்க விரும்பவில்லை. ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக ரஜினியை வைத்து கடந்த 2020 ஆம் ஆண்டு தர்பார் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு அவர் இப்போது வரை எந்த திரைப்படத்தையும் இயக்காமல் இருக்கிறார். அந்த வகையில் முன்னணி நடிகர்களே இவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.

Also read: தளபதி 67 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்.. விஷாலுக்கு பதிலாக ஆக்சன் ஹீரோ

Trending News