புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஒரு வழியாக இயக்குனரை லாக் செய்த அஜித்.. AK-62க்காக லண்டனில் பரபரப்பாக நடக்கும் அடுத்த கட்ட வேலை

இதோ அதோ என்று பல அலப்பறைகளுக்கு நடுவே ஒரு வழியாக ஏகே 62 திரைப்படத்திற்கு இயக்குனர் சிக்கிவிட்டார். துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடித்திருக்கும் ஏகே 62 திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தப் படத்தை யார் தான் இயக்கப் போகிறார்கள் என்ற குழப்பம் மட்டும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் இந்தக் கூட்டணியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தது. அதில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தது. ஆனால் இவை எல்லாம் வெறும் யூகங்களாக மட்டுமே இருந்து வந்தது.

Also read: தூக்கிவிட்ட இயக்குனரை கழட்டிவிட்ட அஜித்.. விஜய் அப்பாவும் விரட்டி விட்ட பரிதாபம்

இந்நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்கான இயக்குனரை லைக்கா நிறுவனம் ஒரு வழியாக முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் பலரும் எதிர்பார்த்தபடியே மகிழ்திருமேனி தான் அஜித்தை இயக்க இருக்கிறார். இதற்கான தடபுடலான ஏற்பாடுகள் அனைத்தும் இப்போது படு ஜோராக நடந்து வருகிறது.

மேலும் மகிழ் திருமேனி தற்போது லைக்கா நிறுவனர் சுபாஷ்கரனை சந்திக்க லண்டனுக்கு பறந்துள்ளார். அங்கு படம் தொடர்பான அனைத்து விஷயங்களும் விறுவிறுப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறதாம். அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி கூறிய கதையில் லைக்கா நிறுவனம் முழுமையாக திருப்தி அடைந்திருக்கிறது.

Also read: மோசமான ஆட்டிட்யூடால் பல வாய்ப்புகளை இழந்த விக்னேஷ் சிவன்.. பதறி ஓடிய முதலாளி

அந்த வகையில் இன்னும் ஓரிரு தினங்களில் இந்த கூட்டணியின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து படத்தின் பூஜையும் போடப்பட்டு படப்பிடிப்பு வேகமாக நடைபெற இருக்கிறதாம். இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான். மேலும் எந்த விஷயத்தையும் முடிவு செய்யாமல் மகிழ்திருமேனியை சுபாஷ்கரன் லண்டனுக்கு அழைக்கவில்லை.

இதனால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் விஜய்யின் லியோ திரைப்படம் தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த படத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் சோசியல் மீடியாவை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இனி அஜித்தின் ஆட்டமும் ஏகே 62 மூலம் படுஜோராக ஆரம்பிக்க இருப்பது சரியான போட்டியாக இருக்கிறது.

Also read: காசுக்காக மானத்தை அடமானம் வைக்கும் டாப் ஹீரோக்கள்.. இனியும் திருந்தலைன்னா கேரியர் சோலி முடிஞ்சுரும்

Trending News