திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நெருங்கிய நண்பருக்கு மொத்தத்தையும் வாரிக் கொடுத்த அஜித்.. ரகசியமாய் வெளிநாடுகளில் செய்யும் வேலை

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் மோத இருப்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த இரு படங்களின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அஜித்தின் துணிவு படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் விநியோகிக்கும் உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் கைப்பற்றியது.

Also Read: யாரையும் அவ்வளவு சீக்கிரமா நம்ப மாட்டேன்.. அஜித்தின் இன்றைய மாற்றத்திற்கு இதுதான் காரணம்

இப்பொழுது ஹாட் டாபிக் துணிவு மற்றும் வாரிசு ரிலீஸ் ஆவதால் எந்த படத்திற்கு அதிக தியேட்டர் கிடைக்கும் என்பதுதான். ஆனால் சத்தமே இல்லாமல் அஜித் தனது நெருங்கிய நண்பருக்கு இந்தப் படத்தில் முக்கியமான ஒரு இவ்வுரிமையை கொடுத்துள்ளார். அஜித்தின் நெருங்கிய நண்பரும் லைக்கா தயாரிப்பு நிறுவனமான சுபாஸ்கரன் அல்லிராஜாக்கு துணிவு படத்தின் எஃப் எம் எஸ் எனப்படும் வெளிநாட்டு உரிமைகளை கொடுத்துள்ளார் .

இந்த விஷயத்தில் நேரடியாக அஜித்தே இறங்கி சுபாஸ்கரன் இடம் பேசியதாக தெரிகிறது. ஏனென்றால் சுபாஷ்கரன் தமிழ்நாடு வந்தால் அஜித் வீட்டில்தான் விருந்து சாப்பிடுவாராம். அந்த அளவிற்கு இவர்களுக்குள் நெருக்கம் உண்டு. ஆகையால் தான் அஜித் இந்த பெரிய பொறுப்பை அவரிடம் எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

Also Read: ரசிகர்களை ஏமாற்றிய அஜித்.. துணிவு படமே இன்னும் முடியலையாம், அதுக்குள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளா?

மேலும் அஜித்தின் 62-வது படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் அஜித்தின் 61-வது படமான துணிவு திரைப்படத்தையும் வெளிநாடுகளில் வெளியிடுவதற்கான உரிமையை லைக்கா பெற்றிருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி துணிவு படத்திற்கு போட்டியாக தளபதி விஜயின் வாரிசு படமும் வெளியாக்குவதால், இந்த இரண்டு படத்திற்கான பட ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளனர். அதிலும் வெளிநாட்டில் துணிவு படத்தை வெளியிடும் உரிமையை பெற்ற லைக்கா கொஞ்சம் அதிகமாகவே ப்ரோமோஷன் செய்ய பார்க்க உள்ளனர்.

Also Read: உள்ளூர்ல நீங்க பாத்துக்கோங்க வெளியூர்ல நாங்க பாத்துக்குறோம்.. துணிவிற்காக களம் இறங்கிய லைக்கா

Trending News