வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை சல்லி சல்லியாய் நொறுக்கும் அஜித்.. ரெடியாக உள்ள அடுத்த ஆப்பு

பல மாதங்கள் எதிர்பார்ப்பாக விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து ஏகே62 படத்தை இயக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். நயன்தாராவின் சிபாரிசில் விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து போக, திருமணமான அடுத்த நொடியிலிருந்தே ஏகே62 படத்திற்காக விக்னேஷ் சிவன் பல வேலைகளை செய்து வந்தார். ஆனால் இவரது ஆசை அண்மையில் மண்ணாய் போனது.

அஜித், விக்னேஷ் சிவனை ஏகே62 படத்திலிருந்து திடீரென விலக்கிய நிலையில், இதற்கு காரணமாக முதலில் அஜித்துக்கு கதை பிடிக்கவில்லை என்றும், விக்னேஷ் சிவனின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்றும் அஜித் தரப்பு தெரிவித்தனர். விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து, அஜித் ஏகே62 படத்தின் கதை பிரம்மாண்டமாக உள்ளது என கூறினார். ஆனால் தீபாவளிக்குள் படம் ரிலீசாக வேண்டுமென்பதால் அடுத்தடுத்த படங்களில் இக்கதையை கொண்டு ஒன்று சேரலாம் என அஜித் தெரிவித்தாக கூறப்பட்டது.

Also Read: மகிழை தூக்கிட்டு 11 வருடங்களுக்குப் பின் அஜித்துடன் இணையும் இயக்குனர்.. லியோவுக்கு ட்விஸ்ட் வைத்த ஏகே 62

இப்படி மாறி, மாறி பல காரணங்கள் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதற்காக வந்த போதிலும், எதை நம்புவது என தெரியாமல் இன்னும் குழப்பத்தில் கோலிவுட் வட்டாராமே உள்ளது. மேலும் அஜித், விக்னேஷ் சிவனை ஏகே62 படத்திலிருந்து விலக்கியத்திலிருந்து அவருக்கு அடி மேல் அடி விழுந்துக்கொண்டே வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் படி தற்போது அஜித்தால் விக்னேஷ் சிவனுக்கு மிக பெரிய ஆப்பு உருவாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து நயன்தாரா சிபாரிசின் பேரில் அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை எல்லாம் விக்னேஷ் சிவன் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் சூர்யாவின் கேரியருக்கே பெரும் அடியாக மாறியது.

Also Read: தியேட்டரில் மட்டும் இல்லாமல், எல்லா இடத்திலும் பட்டையை கிளப்பும் துணிவு.. ரெக்கார்ட் பிரேக் செய்த டார்க் டெவில் அஜித்

அதை போல் கடந்தாண்டு சமந்தா, விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் படு தோல்வியடைந்தது. விக்னேஷ் சிவனின் தொடர் தோல்வியை சமாளிக்க நயன்தாரா மிகப்பெரிய வாய்ப்பாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார். தற்போது அதுவும் இல்லாமல் போக மன வருத்தத்தில் இருக்கும் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிச்சர்ஸும் இழுத்து மூடும் நிலைமையில் உள்ளதாம்.

ரவுடி பிச்சர்ஸ் மூலம் காத்துவாக்குல ரெண்டு காதல், அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் உள்ளிட்ட சில படங்கள் தயாரிக்கப்பட்டது. தற்போது விக்னேஷ் சிவனை அஜித் விலக்கியதிலிருந்து ரவுடி பிச்சர்ஸில் நடிக்கவே பல நடிகர்கள் தயங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படியே போனால் கட்டாயம் விக்னேஷ் சிவன் சினிமாவை விட்டே காணாமல் போவார் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: 4 மாதங்கள் கெடு கொடுத்த அஜித்.. செய்வதறியாமல் முழிக்கும் இயக்குனர்

Trending News