பாலிவுட்டில் பிரபலங்கள் எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையில் தங்களது வலைத்தள பக்கங்களில் போஸ்ட்களை அப்லோட் செய்வர். அதில் நடிகைகளை சொல்லவா வேண்டும் எப்போதுமே தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் 2019 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங் செய்து வருகிறார் மலைக்க அரோரா.
Also Read : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 காதல் படங்கள்.. தளபதி விஜய்க்கு அடையாளம் கொடுத்த விக்ரமன்
49 வயதாகும் மலைக்கா அரோரா, 37 வயதாகும் அர்ஜுன் கபூருடன் இணைந்து புகைப்படங்களை வெளியிடுவது, அவ்வப்போது வெளியில் செல்வது என அனைத்தையும் ஓப்பனாக செய்து வருகிறார். 1998ஆம் ஆண்டு மலைக்க அரோராவிற்கு திருமணம் நடந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். தற்போது மலைக்கா அரோராவிற்கு அர்ஹான் கான் 20 வயதில் மகனும் உள்ளார்.
இந்நிலையில தன்னோடு 12 வயது சிறியவராக இருக்கும் அர்ஜுன் கபூரை மலைக்கா திருமணம் செய்து கொள்ள போவதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தினர். அதற்கேற்றார் போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலைக்கா அரோரா, சமீபத்தில் வெளியிட்ட போஸ்ட் தீயாய் பரவி உள்ளது அந்த போஸ்டரில் மலைக்கா அரோரா வெட்கப்படும் புகைப்படத்துடன் ஐ செட் எஸ் என்ற வாக்கியத்துடன் கேப்ஷனோடு அப்லோட் செய்துள்ளார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை திருமணம் செய்ய ஓகே சொல்லி உள்ளார் என புரளியை கிளப்பி விட்டுள்ளனர். ஆனால் மலைக்கா அரோரா அதற்கு அடுத்த போஸ்ட்டாக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துடன் சேர்ந்து மூவிங் வித் மலைக்கா என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக ஒரு போஸ்டரை வெளியிட்டார்.
இந்த ரியாலிட்டி ஷோ ப்ரோமோஷன்காகத்தான் மலைக்கா அரோரா முந்தைய போஸ்டரை அப்படி அப்லோட் செய்துள்ளாதாக சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும் இதனை யாரும் நம்புவதாக இல்லை. மேலும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரிடமிருந்தும் எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 லவ் ஸ்டோரீஸ்.. 2k ஹிட்ஸ்கள் கொண்டாடிய மணிரத்தினத்தின் காதல் கதை