கடைசியில் அஜித்துக்கு வந்த சீரியஸ்னஸ்.. சிறுத்தை சிவா கூட்டணிக்கு பின் 3 பெரிய திமிங்கலத்துக்கு பொறி வைக்கும் AK

Actor Ajith: அஜித்தின் துணிவு படத்திற்குப் பிறகு அவருடைய விடாமுயற்சி படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வராத நிலையில் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உலகம் சுற்றும் வாலிபராக பைக் ரைடு மூலம் சுற்றிக் கொண்டிருந்தார். அதனாலேயே அஜித்துக்கு தற்போது படத்தில் நடிப்பதற்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்று ஒரு சில பேச்சுவார்த்தைகள் அடிபட்டது.

அத்துடன் இது உண்மையாக கூட இருக்கலாம் என்று நினைக்கும் படி தான் அஜித்தின் நடவடிக்கைகள் மிகவும் ஸ்லோவாக சென்று கொண்டிருந்தது. அதிலும் விடாமுயற்சி படத்திற்கு எழுந்த ஒவ்வொரு பிரச்சனைகளையும் பார்க்கும் பொழுது அவ்வளவுதான் இந்த படம் இப்போதைக்கு வராது. அஜித் கூடிய சீக்கிரத்தில் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிவிடுவார் என்ற நிலைமை இருந்தது.

Also read: இணையத்தில் வைரலாகும் அஜித்தின் போட்டோ.. விடாமுயற்சிக்காக ஏங்கி கிடக்கும் திரையுலகம்

இப்படி என்னதான் இவரைப் பற்றி பலவித கருத்துக்களை முன் வைத்திருந்தாலும் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சைலண்டாக அவருடைய காரியத்தில் கண்ணாக தான் இருந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது உடம்பை ஹீரோ மெட்டீரியலுக்கு ஏற்ற மாதிரி கணக்கச்சிதமாக குறைத்து இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது விடாமுயற்சியின் ரசிகர்களுக்கான ஒரு போஸ்டர் வெளியாகி இருந்தது. அதை பார்க்கும் போது தலையில் குடிமி, கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு வித்தியாசமான கெட்டப்பில் இருந்திருந்தார். இந்த லுக் இந்த படத்திற்காக மட்டுமில்லாமல் இனி வரும் படங்களிலும் உடம்பை ஏற்றாமல் ஸ்லிம்மாகவே மெயின்டைன் பண்ணப் போகிறார்.

Also read: யாருக்கும் அடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்ட கார்த்தி.. முதல் முதலாக அஜித் படத்தில் கம்பேக்

அதற்கு காரணம் விடாமுயற்சி மற்றும் சிறுத்தை சிவா படத்திற்கு பின் அடுத்த படத்திற்காக சில பெரிய இயக்குனர்களை குறி வைத்து களமிறங்க போகிறார். அதில் இயக்குனர் சங்கர், ராஜமவுலி மற்றும் பிரசாந்த் நீல் போன்ற பெயர்கள் எல்லாம் இவருடைய லிஸ்டில் இருக்கிறது.

இந்த மாதிரி இவர் சீரியஸாக முழு நேரமும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டால் இனி அஜித் காட்டில் அடைமழை தான். அத்துடன் இவருடைய ரசிகர்களும் ஆரவாரத்துடன் இவருடைய படங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் இவரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு காரணம் விஜய்யை விட அதிக சம்பளத்தை பெற வேண்டும் என்பதுதான் இவருடைய குறிக்கோளாக இருக்கிறது.

Also read: அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்