கையில் துப்பாக்கியுடன் சுற்றி வந்த அஜித்.. பரபரப்பான திருச்சி மாநகரம்

ak-61-ajith-1
ak-61-ajith-1

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கிளைமாக்ஸ் காட்சிகளில் அஜித் சில மாற்றங்கள் செய்ய சொல்லி உள்ளதாக தகவல் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. அஜித் பைக் மீது அதீத ஆர்வம் கொண்டவர். மேலும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படத்தில் பைக் ஸ்டன்ட் காட்சிகளை அவரே செய்திருந்தார்.

இதுதவிர அஜித்துக்கு பல துறைகளில் ஈடுபாடு உள்ளது. அதாவது அஜித் விமானம் ஓட்டுவதில் மிகவும் திறமையானவர். இதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார். அஜித் சார்பில் தக்ஷா ஆளில்லாத விமானம் குழு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரித்துக் கொடுத்தது.

ஆனால் அஜித் பத்தாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாலும் பல விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக இருக்கக் கூடியவர். இந்நிலையில் நேற்று அஜித் போலீஸ் பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள அதிகாரியிடம் அஜித் பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மாநில அளவிலான 47ஆவது துப்பாக்கிச் சூடும் போட்டி திருச்சியில் துவங்கியுள்ளது. இதில் 10 மீட்டர் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் பிரிவுகளில் அஜித் கலந்து கொண்டார். இந்தப் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

தற்போது அஜித் இந்த போட்டியில் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. அஜித்தின் வருகையால் திருச்சி மாநகரமே பரபரப்பாகியுள்ளது. மேலும் அஜித் இவ்வாறு எல்லா விஷயங்களிலும் கில்லாடியாக இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருமையை ஏற்படுத்தியுள்ளது .

Advertisement Amazon Prime Banner