வின்டேஜ் இயக்குனருடன் கை கோர்க்கும் அஜித் குமார்.. #AK64-ல் நடக்க போகும் மேஜிக்!

Ajith Kumar: அஜித் குமார் கார் ரேஸ் முடித்துவிட்டு எப்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்புவார் என்பது அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் அஜித் எந்த இயக்குனருடன் இணைந்து படப் பண்ணப் போகிறார் என்ற பேச்சுக்களும் பெரிய அளவில் போய்க்கொண்டிருக்கிறது.

அஜித் குமார் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்து பணியாற்றுவது என்பது 90% உறுதியாகிவிட்டது. அத்தோடு சேர்ந்து ஒரு சில இயக்குனர்களின் பெயரும் அடிபடுகிறது. அதில் ஒரு விண்டேஜ் இயக்குனரும் தற்போது இணைந்திருக்கிறார்.

அஜித் குமாரை ஆக்சன் ஹீரோவாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகப்படுத்தி வெற்றியும் பார்த்து இருக்கிறார் இயக்குனர் சரண். அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வாழ்க்கைத் துணையையும் தேடிக் கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

சரண் மற்றும் அஜித்குமார் இணைந்து 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் திரைப்படத்தில் பணிபுரிந்தார்கள். தற்போது அஜித்குமாரின் 64 ஆவது படத்தை சரண் இயக்குவதற்கு பெரிய அளவில் வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்படுகிறது.

இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால் அமர்க்களம் ரேஞ்சுக்கு அஜித்துக்கு ஒரு இண்டஸ்ட்ரியல் வெற்றி உறுதி என்பதுதான் அவருடைய ரசிகர்களின் பெரிய எதிர்பார்க்காக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →