செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித் மச்சானுக்கு செய்த பெரிய துரோகம்.. தவம் கிடக்கும் ரிச்சர்ட்டை ஏமாற்றி 3வது நபரை வளர்த்து விட்ட ஏகே

Ajithkumar: நடிகர் அஜித்குமார் அமர்க்களம் திரைப்படத்தின் தன்னுடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி, ஹீரோயின் ஆக ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக எண்பதுகளின் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர்.

ஷாலினியை போன்று தான் அவருடைய தங்கை ஷர்மிலியும். பேபி ஷர்மிலியாக இவர் நடித்த அஞ்சலி படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோன்றுதான் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்ததோடு, ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் காதல் வைரஸ் மற்றும் திரௌபதி படங்கள் குறிப்பிடத்தக்கவை.

Also Read:விடாமுயற்சி எல்லாம் எனக்கு செகண்ட் ஆப்ஷன் தான்.. பாதி இலங்கையை வாங்கிய சுபாஸ்கரன்

ரிச்சர்ட் பல வருடங்களாக சினிமாவில் ஒரு முன்னணி ஹீரோவாக வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது பட வாய்ப்புகள் வந்தாலும் எதுவுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இன்று வரை நடிகர் அஜித்குமாரின் மச்சானாகத்தான் தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் இதுவரை அஜித் அது போன்ற ஒரு விஷயத்தை செய்யவில்லை. ஏன் தன்னுடைய படங்களில் கூட ரிச்சர்டை ஒரு சின்ன கதாபாத்திரத்தில் கூட அஜித் நடிக்க வைத்தது இல்லை. தன்னுடைய சினிமா அந்தஸ்தை சொந்த விஷயத்துக்காக பயன்படுத்தக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

Also Read:மலையாள ஹீரோக்களை வெறுப்பேற்றிய பகத் பாசில்.. வரிஞ்சு கட்டிக்கொண்டு தமிழுக்கு வரும் அமுல் பேபி

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார் நடிகர் அருண் விஜய். அஜித் நினைத்திருந்தால் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தன்னுடைய மச்சான் ரிச்சர்ட்க்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம். ரிச்சர்ட் கூட நல்ல நடிப்பு திறமை கொண்ட நடிகர் தான்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித், எந்த ஈகோவும் இல்லாமல் தன்னைவிட, அருண் விஜய் நன்றாக நடிக்க வேண்டும் என விட்டுக் கொடுத்து நடித்திருந்தார். இதேபோன்று ரிச்சர்டை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா பாதையில் வெற்றிகரமாக மாறி இருக்கும். ஆனால் அஜித் அந்த உதவியை தன்னுடைய சொந்த மச்சானுக்கு செய்யவில்லை.

Also Read:இந்த வாரம் வெளிவர உள்ள 9 படங்களின் அப்டேட்.. கேஜிஎஃப் இயக்குனர், பிரபாஸ் காம்போ ஜெயிக்க வாய்ப்பிருக்கா?

Trending News