வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தப்புக்கு மேல் தப்பு பண்ணும் அஜித்.. போர்வையை போர்த்தி இருட்டுக்குள் வாழும் ஏகே

Ajithkumar: கடந்த சில தினங்களாக நடிகர் அஜித்குமார் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வளவு நாள் அஜித்துக்காக முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த அவருடைய விசுவாசிகளால் கூட இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால் அஜித் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவரை சுற்றி என்ன நடக்கிறது என்பது அவருக்கு புரிகிறதா என தெரியவில்லை.

அஜித் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை, சமுதாயப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லை என்பது அவர் மீது வைக்கப்படும் நெகட்டிவ் விமர்சனம். அவருக்கு பப்ளிசிட்டி பிடிக்காது, உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார், அவரைப் பற்றி அவர் பேசுவதை விட மற்றவர்கள் பேச வேண்டுமென வாழ்கிறார் என அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டு கொண்டிருந்தது.

சில நேரங்களில் அமைதி காப்பது என்பது தேவைப்படும் ஒரு விஷயம் தான். ஆனால் எல்லா விஷயத்திலும் அமைதியாக தான் இருப்பேன் என்றால் அதற்கு அவர் சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கக் கூடாது. விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது கலைஞர்களை மலேசியாவுக்கு கூட்டி சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் பணத்தை வைத்து நடிகர் சங்க கடனை அடைப்பதற்கு திட்டமிட்டு இருந்தார்.

Also Read:குடும்பத்திற்காக முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அஜித்.. துபாய்யில் ஆக்ரோஷமாக கொந்தளித்த சம்பவம்

அப்போது அஜித்குமார் மக்கள் பணம் நமக்கு எதற்கு என்று தன்னுடைய பங்காக 10 லட்சம் பணத்தை கொடுத்தார். அதே நேரத்தில் அவருடைய படங்களுக்கு டிக்கெட் அநியாய விலையில் விற்கப்படுகிறது. அதை எதிர்த்து எந்த கேள்வியுமே கேட்பதில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த விஜயகாந்த் இறந்தபோது ஒரு சக கலைஞனாக கூட அஜித் மரியாதை செலுத்தவில்லை. அவர் வெளிநாட்டிலிருந்து வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு இரண்டு நிமிட இரங்கல் வீடியோ போட்டிருக்கலாம்.

இருட்டுக்குள் வாழும் அஜித் குமார்

தான் சம்பாதித்த பணத்தை வைத்து தன் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என அஜித் நினைப்பதெல்லாம் சரிதான். ஆனால் அதற்கு சினிமா சரியான துறை கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் சினிமா வேறு, பொது விஷயங்கள் வேறு கிடையாது. நாம் டிக்கெட் கொடுத்து படம் பார்க்கிறோம், நம்மால் வளரும் நடிகர்கள் நமக்கென்று ஒன்று வந்தால் இறங்கி வந்து வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.

அஜித் போன்ற ஒரு முன்னணி ஹீரோ பணம் சம்பாதித்தால் போதும், நாம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்தால் போதும் என நினைத்து கொண்டு இருப்பது ரொம்பவும் தவறான விஷயம். அவரை நம்பி, அவர் ஜெயிக்க வேண்டும் என உழைக்கும் அவருடைய விசுவாசிகளுக்காகவாது அஜித் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். எது நடந்தாலும் எனக்கென்ன என்று போர்வையை போர்த்திக் கொண்டு இருட்டுக்குள் வாழ்வது போல் அஜித் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருவது சரியானது அல்ல.

Also Read:விஜயகாந்த் இறப்புக்கு வருத்தம் தெரிவிக்க முடியல.. ஆனா நல்லா குத்தாட்டம் போட்ட அஜித்

Trending News