வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ரெடி டூ ரேஸ், சினிமாவுக்கு பிரேக், அஜித் எடுத்த முக்கிய முடிவு.. சிவகார்த்திகேயன் காட்டுல அட மழை தான் டோய்!

Ajithkumar: நடிகர் அஜித்திற்கும், சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்பந்தம் என செய்தியின் தலைப்பை பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் அஜித் எடுத்திருக்கும் ஒரு முக்கிய முடிவு இன்னும் சில வருடங்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

ஆனால் சினிமா விமர்சகர்களின் கணிப்பு படி இந்த விஷயம் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் மற்றும் விஜய் இருவரும் சமகாலத்து போட்டியாளராக இருப்பவர்கள். அஜித் மற்றும் விஜய்க்கு நடுவே இருக்கும் போட்டி தான் இப்போதைய தமிழ் சினிமாவின் அடிப்படையான பொருளாதாரம் ஆக கூட இருக்கிறது.

ரெடி டூ ரேஸ், சினிமாவுக்கு பிரேக்:

இந்த நிலையில் விஜய் மக்கள் சேவையே மகேசன் சேவை என முடிவெடுத்து அரசியலுக்கு வந்து விட்டார். இன்னும் சில தினங்களில் அவருடைய கட்சி மாநாடும் நடைபெற இருக்கிறது. அதான் விஜய் சினிமாவ விட்டு போறாரே, இனி அஜித்துக்கு எந்த போட்டியும் இல்லை என சினிமா வட்டாரத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

எல்லோரும் ஒரு கணக்கு போட நடிகர் அஜித்குமார் வேறு ஒரு கணக்கு போட்டு விட்டார். விஜய்க்கு அரசியல் என்றால் அஜித்துக்கு கார் ரேஸ். வரவிருக்கும் ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித் பங்கேற்க இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஜித் குமார் கார் ரேஸ் கிளப் என்னும் பயிற்சி மையத்தையும் தொடங்கிவிட்டார்.

ரொம்ப காலமாகவே அஜித் கார் ரேஸுக்கு திரும்ப இருக்கிறார் என சொல்லப்பட்டு கொண்டு இருந்தது.
இந்த நிலையில் 15 வருடங்களுக்குப் பிறகு கார் ரேஸ் பந்தயத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் அஜித்குமாருக்கு அவருடைய காதல் மனைவி ஷாலினி அஜித் குமார் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் அஜித் எடுத்திருக்கும் முக்கிய முடிவும் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் முடிந்த பிறகு அஜித் குமார் மூன்று வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு தன்னை கார் பந்தயத்திற்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.

விஜய் மற்றும் அஜித் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்கும் காலகட்டத்தில் அதற்கு அடுத்து இருக்கும் நடிகர்கள் சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி போன்றவர்கள் தான். ஆனால் சினிமாவில் இவர்களுடைய பாதை என்பது தனித்துவமாக இருக்கிறது.

வித்தியாசமான கதை களங்களில் நடித்து தங்களை நல்ல நடிகர்களாக நிரூபிக்க வேண்டும் என்று ஓடுகிறார்களே தவிர இவர்களுடைய இலக்கு நம்பர் ஒன் இடம் என்பது இப்போதைக்கு கிடையாது. எனவே இவர்களைத் தாண்டி மாஸ் ஹீரோ, என்று அடுத்து சிவகார்த்திகேயன் தான் வருவார், அதற்கு ஏற்றது போல் அவருடைய கைவசம் அடுத்தடுத்து படங்களும் இருக்கிறது என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யின் அரசியல் முடிவு, அஜித் குமாரின் பேஷன் போன்றவைகளால் அடுத்து சிவகார்த்திகேயன் காட்டில்தான் அடை மழை வெளுத்து வாங்க போகிறது.

Trending News