Ajithkumar: விஜய் அரசியலுக்கு போய்விட்டார், அஜித் தன்னுடைய நீண்ட நாள் கனவான கார் ரேஸுக்கு போய்விட்டார். இனி தமிழ் சினிமாவை யார் காப்பாற்றுவாங்க.
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளத்தின் நாம் அதிகம் பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் இது. . இது போன்ற புரளிகளுக்கு இருங்க பாய் என்ற மூவ்மெண்ட்டை கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
அஜித் கார் ரேசுக்காக சில மாதங்களுக்கு படங்களில் எதுவும் நடிக்கப் போவதில்லை என்றுதான் கூறியிருந்தார்.
அதற்கு காரணம் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை சேர்த்து செய்ய தனக்கு பிடிக்காது என்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.
அதற்குள் அஜீத் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டது போல் பேசப்பட்டது. கார் ரேஸ் முடிந்ததும் அஜித் குமார் ஒரு பெரிய இயக்குனருடன் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
அதுவும் பான் இந்தியா படத்தை தயாரித்து கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய பிரசாந்த் நீல் தான்.
கே ஜி எஃப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட திரை உலகம் பக்கம் திருப்பினார். இவருடைய இயக்கத்தில் தான் அஜித்குமார் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அஜித்தின் கார் பந்தய போட்டிகள் முடிவடைந்த கையோடு இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.