நடிகர் அஜித்துக்கு இன்று இருக்கக்கூடிய மாஸ் மிக பெரியது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியளவில் மாஸான நடிகராக இருக்கிறார். அவரை வைத்து ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என பல இயக்குனர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் அஜித்தை சரியாக பயன்படுத்தாமல் கிடைத்த வாய்ப்பை பல இயக்குனர்கள் தவற விட்டும் இருக்கின்றனர். அஜித்தின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படம் கடந்த 2007ஆம் ஆண்டு விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான பில்லா திரைப்படம். அஜித்தின் இமேஜை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற படம்.
விஷ்ணு வர்தன், அஜித், யுவன் சங்கர் ராஜா என அந்த கூட்டணி ஒன்னுக்கு ஒன்னு சலச்சது இல்லை என்று சூப்பர் ஹிட் கொடுத்தது. அதன் பின் ஆரம்பம் திரைபடத்தில் இந்த கூட்டணி இணைந்தது. அதன் பிறகு அஜித்தின் டிராக் அப்படியே மாறி சிறுத்தை சிவா, H.வினோத் என்று சென்று விட்டது.
மீண்டும் பில்லா போல ஒரு படம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். விஷ்ணு வர்தனும் அஜித்துக்கு ஒரு கதையோடு தயாராக இருக்கிறாராம். ஆனால், அஜித்தான் அவரை காக்க வைத்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா, H. வினோத் போன்றவர்கள் மிகவும் ஜாலியான கேரக்டர்கள். அவர்கள் தான் அஜித்துக்கு தற்போது ஃபிட் ஆக இருக்கின்றனர். அதனால் தான் தொடர்ந்து அஜித் அவர்களோடு பயணிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
ரசிகர்களுக்காக விஷ்ணு வர்த்தனோடு கூட்டணி சேர்ந்தால் பில்லா போன்ற மாஸ் ஆன ஒரு படம் வரும். விஷ்ணு வர்தனும் அதுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறாராம். ஆனால் ஏன் இவ்வளவு தயக்கம் என்று தெரியவில்லை.