தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் அனைவருக்கும் சிறந்த கதைகள் அமைந்தாலும். மற்ற மொழி படங்களின் மீது ஆர்வம் ஏற்பட்டு அதை ரீமேக் செய்து தமிழ் சினிமாவிலும் வெற்றி அடைவார்கள். அது ஒரு சில ஹீரோக்களுக்கு அனைத்து ரீமேக் படங்களுமே ஹிட்டாகிவிடும். வேற ஹீரோக்களுக்கு சரியாக அமையாது. இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு நேரம் சரி இருந்தால் மட்டுமே அந்த படம் மக்களால் வரவேற்கப்படும்.
ஏனென்றால் தமிழ் மக்களின் மனதை தெளிவாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அவர்களுக்கு ஏற்றவாறு கதைக்களத்தை மாற்றி அமைக்க முடியும். உச்ச நட்சத்திரங்கள் சினிமாவில் வளர்ந்த வந்த காலத்தில் அந்த ரீமேக் படங்கள் அவர்கள் வளர்ச்சிக்கு முக்கியமான வெற்றியாக அமைந்திருக்கும். அந்த வரிசையில் இப்படி ரீமேக் படங்களில் அஜித் நடித்து வெற்றி, தோல்வி பெற்ற படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.
Also Read : ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க
அஜித் இதுவரை கிட்டத்தட்ட 10 ரீமேக் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கிரீடம் ஆகிய படங்கள் சராசரியான வரவேற்பை பெற்றது. சராசரி வெற்றி பெற்றாலும் அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்த படமாக அமைந்தது. பில்லா மற்றும் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் ரசிகர்களை மனதில் நீங்கா இடம் பிடித்தது என்றே கூறலாம்.
மேலே குறிப்பிட்டதை தவிர அஜித் நடிப்பில் ரீமேக்கில் வெளிவந்து தோல்வியடைந்த படங்களும் உண்டு அதை பார்க்கும்போது இப்படி போய் கதையை தேர்வு செய்து விட்டாரோ என்று ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்வார்கள். பரமசிவன், ராஜா, ஏகன், உல்லாசம், தொடரும், அவள் வருவாளா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.
Also Read : ஏ ஆர் முருகதாஸை வெறுத்து ஒதுக்கிய அஜித், சிக்கிய விஜய்.. இன்று வரை இணையாததற்கு இதுதான் காரணம்
என்னதான் இந்த படங்கள் தோல்வியாக அமைந்தாலும் படங்களில் உள்ள அஜித் ஒவ்வொரு படத்திலும் தன்னை மாற்றிக்கொண்டும், தன்னைத்தானே செதுக்கிக் கொண்டும் தன்னை வளர்த்து வந்த முக்கியமான படங்களாக அமைந்தன. சினிமாவின் வளர்ச்சிக்கு அஜித்திற்கு பக்கபலமாக அமைந்த இந்த ரீமேக் படங்கள்.
அஜித் ரீமேக் படங்களில் மட்டும் தோல்வி படங்கள் அல்ல அவர் நடித்த நிறைய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. அப்படி தோல்வி படங்களாக அமைந்தாலும் அவர் இன்று தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமாக இருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அவரது தோல்வியே அவருக்கு இந்த மாதிரியான வெற்றியையும் மற்றும் ரசிகர்கள் உருவாக காரணமாய் அமைந்தன, மற்ற நடிகர்களுக்கு இது பொருந்தாது.
Also Read : அஜித்துக்கு இயக்குனர் கொடுத்த டார்ச்சர்.. எல்லாருடைய சாபத்தினால் பறிபோகும் பட வாய்ப்பு