வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வருசத்துக்கு 2 டார்கெட், சரியான பாதையில் AK.. விஜய்க்கு பயத்தை காட்டும் அஜித்தின் மூவ்

Ajithkumar: நடிகர் அஜித்குமார் வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் சரி, அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு படம் கொடுத்தாலும் சரி அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. நிறைய நிறுவனங்களால் எடுக்கப்படும் வருட இறுதி கணக்கெடுப்பில் அதிகம் ரசிக்கப்பட்ட ஹீரோ, அதிகம் தேடப்பட்ட ஹீரோ என முதலிடத்தில் இருப்பது இவர்தான்.

எனக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை, என்னை தல என்று கூப்பிடாதீங்க என்று அஜித் அடுத்தடுத்து அவருடைய ரசிகர்களுக்கு நிறைய உத்தரவுகள் போட்டார். அதையும் தாண்டி இன்று வரை அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது அளவு கடந்த பாசத்தை கொட்டி வருகிறார்கள். இதனால் அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.

அஜித் தற்போது அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். எப்போதுமே அஜித் ஒரு படத்தை முடிக்கும் வரை மற்றொரு படத்தை பற்றி யோசிக்க மாட்டார். அப்படி இருக்கும் பொழுது விடாமுயற்சி முடிவதற்குள்ளேயே அஜித்தின் 63 வது படத்தின் அப்டேட் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்பது வெறும் வதந்தியாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது.

Also Read:நான் வெஜ்ஜை நிறுத்திட்டு சியர்ஸ் போடும் அஜித்.. மண்டையை பிய்த்துக் கொள்ளும் மகிழ் திருமேனி

உண்மையில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய 63 வது படத்தின் வேலைகளை ஆரம்பிக்க சொல்லிவிட்டார். விடாமுயற்சி படம் மே 1 அவருடைய பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகிறது. ஏகே 63 படம் ஏப்ரல் மாதமே ஆரம்பிக்க இருக்கிறது. அஜித்குமார் இனி வருஷத்திற்கு இரண்டு படங்கள் கொடுப்பது என முடிவெடுத்து இருக்கிறார். இதுதான் ஏகே 63 ஏப்ரல் மாதமே ஆரம்பிப்பதற்கு காரணம்.

விஜய்க்கு பயத்தை காட்டும் அஜித்தின் மூவ்

அஜித் குமாருக்கு படம் நடிப்பதில் ஆர்வம் இல்லை, சினிமாவை விட்டு விலகப் போகிறார், வெளிநாட்டில் செட்டிலாக போகிறார் என நிறைய வதந்திகள் வெளியானது. அது அத்தனைக்கும். வைக்கும் விதமாக அஜீத் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். தன் மீது அதீத நம்பிக்கை மற்றும் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காகத்தான் இந்த முடிவு.

நடிகர் விஜய் அரசியல் பணிகளுக்காக தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து இரண்டு வருடங்கள் பிரேக் எடுக்க போகிறார் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சமயத்தில்தான் அஜித் வருஷத்துக்கு இரண்டு படம் என்ற முடிவையும் எடுத்திருக்கிறார். இது நடிகர் விஜய்யின் பிரேக் எடுக்கும் முடிவை எந்த அளவில் மாற்றம் என்பது இனி தான் தெரியும்.

Also Read:அஜித்துக்கு புடிச்சா எனக்கும் புடிக்கணுமா? முரண்டு பிடிக்கும் இயக்குனர்.. விடாமுயற்சிக்கு விடாமல் விழும் அடி

Trending News